எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Saturday, April 13, 2019

விகாரி வருடம்.. பூமியில் ஏற்படப்போகும் அழிவுகள்... 12 ராசிக்கும் பலன் எப்படி?

மங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019 இல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும்.

திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு.

நாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். மதக்கலவரங்கள் ஏற்படும்.

ராஜாவாக சனி வருவதால் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை அரசியல் குழப்பங்கள், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள், மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி உண்டாகும்.

இளைஞர்கள், மாணவர்கள் மொழி, இன அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவர்.

தங்கம், வெள்ளி விலை உயரும். பங்குச் சந்தையும் நிலையில்லாமல் இருக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல், இயற்கை உணவு, மருந்து ஆகிய துறைகளில் பங்குகளின் விலை உயரும்.

இனி கிரகங்களின் இடப்பெயர்ச்சிக்கமைய 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்...

மேஷம் - நேயர்களுக்கு இனிய காலம்.

ரிஷபம் - நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்

.மிதுனம் - ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்.

கடகம் - வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்.

சிம்மம் - நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்.

கன்னி - இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்.

துலாம் - பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்குமாம்.

விருச்சிகம் - சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்.

தனுசு - ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்.

மகரம் - எதிலும் தேவை கவனம்.

கும்பம் - யோக வாய்ப்புகள் உருவாகுமாம்.

மீனம் - புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149