எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, April 22, 2019

‘மாஷா அல்லாஹ்’ தற்கொலை குண்டுதாரியின் உடலில் குத்தியிருந்த (Tatoo) டாட்டு

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன – முப்படைத் தளபதிமார் – பொலிஸ் மா அதிபர் அரச புலனாய்வுத் துறைத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் – சிலரின் உடம்பில் ‘மாஷா அல்லாஹ்’ என்று அரபு ( tatoo )மொழியில் எழுதப்பட்டிருந்தமையால் அவர்கள் வெளிநாடு ஒன்றில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவர் என்றும் அவரின் இரு மகன்கள் அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இன்றைய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து முன்னர் வந்த எச்சரிக்கைகள் பற்றியும் இங்கு பேசப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் மற்றும்முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.முக்கியமான கேந்திர நிலையங்கள் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீதான பாதுகாப்பை அதிகரிக்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட – காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் மரணமடைந்தோர் இறுதிக்கிரியைகளுக்கு அரச உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் பின்னர் விசேட அமைச்சரவையை கூட்டினார் ஜனாதிபதி.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149