எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Monday, April 22, 2019

தாக்குதல் நடந்த மூன்று ஹொட்டல்களிலும் ரூம் எடுத்தவர் ஒரே நபர்.! யார் தெரியுமா?

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்தமை பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பெரி, சினமன் கிரான்ட், ஷங்ரி-லா என்பனவற்றில் தற்கொலை குண்டுத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த மூன்று ஹோட்டல்களிலும் ஒரு பெயருடைய நபரே, அறைகளை வாடகைக்கு பதிவு செய்திருப்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


அவர் ஒரே பெயரில், ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தியே தங்குவதற்கு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். முகமட் அஸ்ஸம் முகமட் என்பவரே அறையை பதிவு செய்திருப்பதாக குண்டுவெடித்த ஹோட்டலின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்து கொழும்பு நகரில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரும்பாலான ஹோட்டல்களின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, புதியவர்கள் எவரையும் ஹோட்டல்களில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மூன்று ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் காரணமாக 34 வெளிநாட்டவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர்.

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149