எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, April 8, 2019

யாழ் பல்கலை வளாகத்தில் நடந்தது என்ன..? பிண்ணனியில் அரசியல் அடியாட்களா.?

யாழ். அரசியல் எடுபிடிகள் கழகமான யாழ் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் கழகத்திற்கு இவ்வாண்டுக்கான புதிய மாணவர் அணியிலுள்ள சில மாணவிகள் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைப்பதுடன், குறித்த காவாலிகளுக்கு எதிராக நடிவடிக்கை எடுக்குமாறு வலுயுறுத்தப்படுகின்றது:

நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த கலைப்பீட புதுமுக மாவணர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாணவிகள் சிலரே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஒட்டுக்குழு புளொட்டின் எடுபிடிகள் சிலரே மேற்படி செயலை மேற்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.


கனிஷ்ட மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்ற மாணவர்கள் என்றபோர்வையில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரசியல் கைக்கூலிகளாக செயற்படும் சிலரே மேற்படி இழிசெயலை மேற்கொண்டனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடிவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலியல்சேட்டை சம்பவம் ஒன்றை வீடியோ செய்ய முற்பட்ட மாணவி ஒருவர் மாணவர்கள் என்ற போர்வை போர்த்திருக்கும் காடையர்களால் அடித்து தாக்கப்பட்டுள்ள இழிசெயல் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த மாணவியை 5 க்கு மேற்பட்டவர்கள் இணைந்து தாக்கி தங்களது வீரத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த துணைவேந்தர் இடம்பெறவிருந்த வரவேற்பு நிகழ்வை ரத்து செய்துள்ளார்.
எதுவாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் குப்பை தொட்டியாக மாறியுள்ள யாழ் பல்கலைக் கழகத்தில் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவது என்பது கடினமான காரியமாகவே இருந்து வருகின்றது.

சட்டம் ஒழுங்கு விடயத்தில் கன்னியமாக செயற்பட்; ரஜனி திரணகம அம்மையாருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் பின்னர் காடையர்கள்கூடம் என்ற அங்கீகாரத்தை பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தில் குற்றங்கள் சர்வசாதாரணமாக மாறியுள்ளது:

எனவே மேற்படி குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149