எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Thursday, April 11, 2019

மட்டு காத்தான்குடியில் ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 44 வயதுடைய ஆண் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையில் போதைவஸ்து ஓழிப்பு பிரிப்பு பொலிஸ் பரிசோதகர் மதுரங்க உட்பட்ட குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு புதிய காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் குறித்த நபரை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது அவரிடமிருந்து 8 கிராம் 600 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.


இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149