எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, April 22, 2019

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இரு இடங்களில் வெடிபொருட்கள் மீட்பு.!!

புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பதற்றம்!

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் சற்று முன்னர் வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 87 குண்டுகளுக்கான சாதனங்களை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பதற்றம்! மற்றுமொரு பொதி மீட்பு!

சற்று முன்னர் கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு பார்சல் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக கோட்டை பகுதியை சுற்றிவளைத்துள்ள விசேட அதிரடிப்படையினர் அந்த பார்சலை சோதனையிட தயாராகி வருகின்றனர் எனவுத் தெரிவிக்கப்படுகின்றது.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149