எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Thursday, April 11, 2019

இலங்கையில் மதமாற்றத் தடைச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்!!

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்… என்று ஒரு புலவன் பாடி மகிழ்ந்தான். இங்கு பெற்ற தாய் என்பது தனித்து பெற்றவளை மட்டும் குறிப்பிடுவதன்று.

மாறாக தாய்மொழி, தாய்ச்சமயம், தாய் நாடு என எல்லாவற்றையும் பொருள்படுத்தியே பெற்ற தாய் என்று பெருமையாகக் கூறிக் கொண்டான் அந்தப் புலவன்.இதன் வழி பெற்ற தாய், பெற்ற தந்தை என்ற பெயர்களை யாரும் மாற்ற முடியாது. ஒரு பிள்ளையை பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்றால், அந்தப் பிள்ளையை வளர்ப்பவர்கள் பாதுகாவலர்கள் என்றாகின்றனர்.

குழந்தையைத் தத்தெடுத்தால் வளர்ப்புத் தாய், வளர்ப்புத் தந்தை என்றாகிறது.
தவிர; ஒரு பிள்ளை பிறந்தால், பிறப்புச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்வதற்குப் பெற்றவர்களின் பதிவுத் திருமணச் சான்றிதழ் தேவைப்படுகிறது. கூடவே தந்தை கையயாப்பமிடுகின்ற முறையும் உண்டு.

இதில் குறிப்பிட்ட சான்றிதழ் இல்லையாயின் பிறப்புச்சான்றிதழ் பதிவாக முடியாது போகும்.

இதேபோன்று ஒரு பிள்ளை தான் பிறந்த இனத்தை, தன் தாய்மொழியை மாற்றிப் பதிவதும் முடியாத
காரியம்.

அதாவது சிங்கள இனத்தில் பிறந்த ஒருவர் தன்னைத் தமிழர் என்றோ அல்லது தமிழர் ஒருவர் தன்னை சிங்கள இனத்தவர் என்றோ விண்ணப்பிப்பது தவறான தகவலின் பாற்பட்டதாகும்.

ஆக பெற்றவர்கள், பிறந்த இடம், பிறந்த நாடு, தாய்மொழி, இனம் என எவற்றையும் மாற்றுவது முடியாத காரியமாக இருக்கின்ற போதிலும் சமயத்தை மட்டும் யாரும் மாற்றிக் கொள்ளலாம் என்றால், இது எந்த வகையில் நியாயமாகும்.

பெற்றோர், இனம், மொழி, நாடு என்பவற்றை மாற்ற முடியாது என்று வரையறை செய்த மேற்குலகம் சமயத்தை மட்டும் விரும்பியவாறு மாறலாம் என்று சுதந்திரம் கொடுத்தது எனில், அதன் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினமன்று.

சரி, திருமணம் செய்த தம்பதிகள் பிரிந்து செல்வதென்றால் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி விவாகரத்துப் பெறவேண்டும். ஒரு பிள்ளையைத் தத்தெடுப்பதென்றாலும் நீதிமன்றத்தின் அனுமதியை உரியவாறு பெற்றாக வேண்டும்.

இதேபோன்று வைத்த பெயரை மாற்றம் செய்வதாக இருந்தால் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பதிவாளர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறும்போதே சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

ஆனால் மதமாற்றம் என்றால் மட்டும் வீட்டில் இருக்கின்ற பிள்ளையார் படத்தை, முருகன் படத்தை உடைத்து, சாத்தான் ஒழிந்து போகட்டும் என்று திட்டித் தீர்த்தால் அது போதும்.

இதுதவிர, மேலதிக தகைமையாக சைவ சமயத்தை நிந்தை செய்வது; சைவக் கடவுளை கேலி செய்வது என்பன மதமாற்றத்தின் பால் காட்டும் விசுவாசமாகும்.

இவ்வாறாக, தான் பிறந்த தாய்ச் சமயத்தை யார் நினைத்தாலும் எப்போதும் கைவிடக் கூடியதாக இருப்பது மிகப்பெரும் துரதிர்ஷ்டமாகும்.

எனவே மதமாற்றம் என்பதைத் தடை செய்வது மிகவும் அவசியமானதாகும். மதமாற்றம் தடுக்கப்படாவிடில் இந்த நாட்டின் ஆதிச் சமயங்களின் ஆயுட்காலம் சொற்பமானதாகவே இருக்கும்.

-வலம்புரி-

பிரபலமான செய்திகள்

Loading...

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149