எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On:Monday, May 13, 2019

இலங்கையில் தொடரும் பதற்றம்! இதுவரை மூன்று முஸ்லிம்கள் பலி?

கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.

பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலில் சில குண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் ஊராடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளதுடன் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக உச்சக்கட்ட பலத்தைப் பிரயோகிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149