எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, May 14, 2019

மீண்டும் கறுப்பு ஜூலை இடம்பெற இடமளிக்க வேண்டாம்: எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ!

கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் நாட்டில் மீண்டும் இடம்பெற இடமளிக்க வேண்டாம்: எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ! கறுப்பு ஜூலை போன்ற சம்பவங்கள் நாட்டில் மீண்டும் இடம்பெற இடமளிக்க வேண்டாம்.சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்.” எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ விசேட உரை

மக்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கையில் மேலும் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று ஒரு நிலையை உருவாக்க இடமளிக்க வேண்டாமென்றும் மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தனது செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.சமூகவலைத்தளங்கள் மீதான தடை மற்றும் ஊடகங்களில் சில காட்சிகளை காண்பிக்க தடை விதிக்கின்றமை என்பன, மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹேன்பிட்டி - அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகவலைத்தளங்கள் மீதான தடையை விதித்தல், ஆயுதங்கள் பிடிபடும் போது அவற்றை ஊடகங்களில் காண்பிக்கவிடாமல் தடுத்தல் என்பன முட்டாள்தனமான வேலை.இதனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்குமே தவிர பிரச்சினை தீராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை பௌத்த நாடு இல்லை என்றும், இது இலங்கையர்களின் நாடே என்றும் அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்திருந்த கருத்துக்கு, இதன்போது மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்பை வெளியிட்டார்.ஏற்கனவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இது சிங்கள பௌத்த நாடு என்பதை தெளிவாக கூறி இருப்பதாகவும், யாருடைய கூற்றை கேட்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுமாறும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149