எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, May 13, 2019

மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு பணம் வந்தது எப்படி? அறிக்கை தயாராகிறது!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பான சர்ச்சையை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ சுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் உயர் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான குழுவின்உயர்கல்வி உபகுழு தலைவரான ஆசு மாரசிங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பல்கலைகழகத்திற்கான நிதி பரிமாறப்பட்ட விதம் குறித்த பொலிஸ் அறிக்கையை பிரதமர் கோரியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


ஷரியா பல்கலைகழகத்தை நிர்மாணிக்க சவுதி அரேபியாவின் தனியார் அறக்கட்டளை மூலம், இலங்கையிலுள்ள நான்கு வங்கிக்கணக்குகளிற்கு 3600 மில்லியன் ரூபா அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். ஹிரா பவுண்டேசன் மற்றும் மூன்று நிறுவனங்களின் ஊடாக இந்த பணம் பெறப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஆகியோர் ஹிரா பவுண்டேசன், மற்றும் மூன்று நிறுவனங்களின் இயக்குனர் சபையில் அங்கம் வகிக்கிறார்கள்.

“அரச அங்கீகாரம் இல்லாத ஒன்றை பல்கலைகழகம் அல்லது உயர்கல்வி நிறுவனம் என நீங்கள் அழைக்க முடியாது. உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் தனியார் நிறுவனம் ஒன்று கட்டடங்களை கட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் சரியானதா என்பதை எமது குழு மீளாய்வு செய்யும். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை போல அரசு- தனியார் இணைந்த பல்கலைகழகமாக்கவும், சுற்றுலாத்துறை, தொழில் பயிற்சி பாடத்திட்டங்களை நடத்தவும் முன்மொழியவுள்ளோம்“ என்று தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்தில் 30 ஏக்கர் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. பின்னர் மேலதிகமாக 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்குள் நிலஅளவை திணைக்களத்தினர் அதை அளவீடு செய்வார்கள். உபகுழுவின் உறுப்பினர்கள் அடுத்த வாரம் நேரில் சென்று மட்டக்களப்பு பல்கலைகழகத்தை ஆய்வு செய்யவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பான விசாரணைகளை நாடாளுமன்ற கோப் குழுவும் ஆரம்பிக்கவுள்ளது. பல்கலைகழகத்திற்கான நிலம் எப்படி வழங்கப்பட்டது என்பதையும் ஆராயவுள்ளதாக கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149