எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Sunday, May 5, 2019

தற்கொலை குண்டுதாரியை நேருக்கு நேர் பார்த்தேன் : இலங்கை குண்டுவெடிப்பில் தப்பிய பெண்ணின் திக் திக் நிமிடங்கள்

தற்கொலை குண்டுதாரியை நேருக்கு நேர் பார்த்தேன் : இலங்கை குண்டுவெடிப்பில் தப்பிய பெண்ணின் திக் திக் நிமிடங்கள்

இலங்கை குண்டுவெடிப்பின்போது ஷாங்கரி லா ஹொட்டலில் தற்கொலை குண்டுதாரியை நேருக்கு நேர் பார்த்த அனுபவத்தை பெண் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த நபர் தான் தற்கொலை தாக்குதல்தாரி என பின்னர் செய்தி ஊடகங்களில் வெளியான காணொளி காட்சிகளில் இருந்து அறிந்துகொண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஹனெக் மனோகரன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் ஷாங்கிரி லா ஹொட்டல் அறையில் இருந்து உணவகம் நோக்கி சென்றுள்ளனர்.அந்த ஹொட்டலின் ஊழியரான சாம் நாட்லேவின் உதவியுடன் தங்களுக்கான மேஜையை தேடியுள்ளனர்.

ஆனால், ஈஸ்டர் நாள் என்பதால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருந்ததால் காலியான மேஜைகள் ஏதும் தென்படவில்லை.

இருப்பினும் ஹனெக் தமது உறவினருடன் மேஜைக்காக காத்திருந்துள்ளார். அப்போது நபர் ஒருவர் ஹனெக் மீது உரசியபடி கடந்து சென்றுள்ளார்.

அந்த நபரின் முகம் தமக்கு இப்போதும் நினைவில் இருப்பதாக கூறும் ஹனெக், அதிக தாடியுடன், எனது முகத்திற்கும் 20 செ.மீ தூரத்தில் நின்றுகொண்டு அவரும் மேஜை ஒன்றை தேடுவதாக பட்டது என்றார்.

பரபரப்பாக செயல்பட்ட அவரது நடவடிக்கையில் அப்போதே லேசான சந்தேகம் எழுந்தது என கூறும் ஹனெக்,

அவர் மூச்சுவிடுவது எனது முகத்தில் படும் வகையில் மிக அருகாமையில் அந்த நபர் நின்றதாக ஹனெக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தாம் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றதாகவும், அந்த நபரிடம் இருந்து தமது தலையை திருப்பிக் கொண்டதாகவும் ஹனெக் தெரிவித்துள்ளார்.

மேலும், காலை உணவுக்கான நேரம் அது. அந்த நபர் ஏன் இவ்வளவு பரபரப்பாக காணப்படுகிறார் என ஒரு கணம் எண்ணிப் பார்த்ததாக கூறும் ஹனெக்,

பொதுவாக காலை உணவருந்த வருபவர்கள் தங்களது அறை சாவி அல்லது மொபைல்போன் எடுத்து வருவார்கள்,

ஏன் இந்த நபர் தூக்கமுடியாத அளவுக்கு கனமான தோள் பையுடன் உணவருந்த செல்கிறார் எனவும் யோசனை செய்ததாக கூறுகிறார் ஹனெக்.

அந்த நபருடன் இன்னொருவரும் இருந்ததாக கூறும் ஹனெக், இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டதாகவும் நினைகூர்ந்துள்ளார்.

இதனிடையே ஹொட்டல் ஊழியர் சாம் நாட்லே மீண்டும் வந்து இருக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்த உணவகத்தின் வேறு பகுதியில் காத்திருக்கவும் அவர் பணிந்துள்ளார். அந்த முடிவே தங்களை தற்போது காப்பாற்றியுள்ளது எனவும் ஹனெக் நினைவுகூர்ந்துள்ளார்.

இதனிடையே உணவு வைக்கப்படிந்த பகுதிக்கும் தமக்கும் 5 மீற்றர் இடைவெளியே இருந்த நிலையில் திடீரென்று மின்னல் தாக்கியது போன்ற ஒளிவெட்டமும், தொடர்ந்து வெடிகுண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டதாக கூறும் ஹனெக்,

அந்த மொத்த பகுதியும் அப்போது இருளில் மூழ்கியது என்றார். அப்பகுதி முழுவதும் மரண ஓலங்கள் எழுந்ததாக கூறும் ஹனெக்,

திடீரென்று இரண்டாவது வெடிகுண்டும் வெடித்தது என்றார். முதலில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக கருதியதாக கூறும் அவர், ஆனால் அது வெடிகுண்டு என்பது பின்னர் தெரியவந்தது என்றார்.

அந்த காட்சிகள் ஏதும் தமது நினைவை விட்டு இன்னமும் விலகவில்லை என கூறும் ஹனெக், தாம் அவுஸ்திரேலியாவில் பிறந்தாலும், இலங்கை எனது தாய்நாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149