எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Thursday, May 9, 2019

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு உதவிய பீத்தமிழ் அதிகாரிகள் இவர்கள்தான்.!

மட்டக்களப்பு – புனானை பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.ஏம்.ஹிஸ்புல்லாவால் நடத்தப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு (Batticaloa Campus) நிலம் கொடுத்தமை தொடர்பிலும்,பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் வாகரை பிரதேச செயலக அரச அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு,நாடாளுமன்ற கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பல விடயங்கள் மகாவலி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டிருந்தாலும்,இதற்கு அனுமதி வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பது வாகரை பிரசேத சபையே ஆகும்.

தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் பிரதேச சபைகள் அனைத்தும் பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.இந்த இந்திரன் என்பவர் யார்?

அக்கால பகுதியில் வாகரை பிரதேச சபையின் செயலாளராக இருந்து பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டனையில் இடமாற்றம் பெற்று சென்ற இந்திரன் என்பவரால் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு உறுதியில்லாமல் ஒரு சில கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது தான் அத அரம்பம்...

அதற்கு சன்மானமாக பல தொகை பணமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்திரன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருக்கும் தனது உறவு முறையான ஒருவர் ஊடாகவே G.C.E O/Lஐ முறை தவறி முழுமைப்படுத்தியவர் அதன் பின் அவரின் உதவியுடனே அரச வேலையிலும் இணைந்தவர்... இப்படிப் பட்டவர்கள் தான் வாகரைப் பகுதிக்கு அரச அதிகாரிகள் இது மக்களின் குற்றமா அல்லது படைத்தவர் குற்றமா என தெரியவில்லை மக்கள் தினம்... தினம் வேதனையில்...

இதன் பின்னர் ஆமை வேகத்திலிருந்த (Batticaloa Campus) யின் கட்டட அனுமதி தேர்தலின் பின்னர் வாகரை பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர் கோணலிங்கம் என்பவர் 11 கட்டடங்களை உறுதியின்றி வழங்கியுள்ளார்.

இந்த கோணலிங்கம் என்பவர் யார்?

கதிரவெல பிரதேசத்தினை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அரசியல் தெரியாமலேயே அரசியல்வாதியாக வந்தவர்.

இவர் ஆளுநராக எம்.ஏ.எல்.ஏம்.ஹிஸ்புல்லா பொறுப்பேற்ற பின் திருகோணமலைக்கு சென்று அவரை சந்தித்து வந்தமை தொடர்பில் பல்வேறு சாதக,பாதக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் இதனை யாருமே நம்பவில்லை.ஆனால் இவர் (Batticaloa Campus) க்கு செய்த சட்டத்திற்கு முரணான மற்றும் தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நோக்குமிடத்து, இவர் ஹிஸ்புல்லாவின் நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புக்குள் நுழைந்த ஒரு கறுப்பு ஆடாகவே பார்க்கப்படுகின்றது.

(Batticaloa Campus) விடயத்தில் இவர் சண்டிசமாக பணம் பெற்றிருப்பது.பல தொலைபேசி அழைப்புக்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் இவரை கட்சி நல்லவர் என நம்பியிருக்கும் நிலையில், இவர் மணல் அகழ்விற்கு கூட திருகோணமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளமை. இவரின் இப்போதைய சூழ்நிலையில் உண்மையாகவே கருதப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் அப்பாவியாக செயற்படும் தவிசாளர் கோணலிங்கம் அந்த அப்பாவித் தனத்தை சாதகமாக பயன்படுத்தி பல திருவிளையாடல்களில் ஈடுபடுவது நிரூபனமாகியுள்ளது.

அந்த ஆதாரங்கள் அடங்கிய விபரம் விரைவில் வெளியிடப்படும்... காலா காலமாக பாதிக்கப் பட்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் நலனில் சிறிதளவும் அக்கறை அற்ற ஒருவராகவே வலம் வருகிறார்.

ஹிஸ்புல்லா ஆளுனராக தெரிவு செய்யப்பட்ட போது எல்லோரும் அமைதியாக இருந்த வேளை திருகோணமலைக்கு ஓடிச் சென்று படம் எடுத்து முகநுால் பக்கத்தில் போட்டவரும் இந்த தவிசாளர் கோணலிங்கம்.. சென்ற விடயம் தொடர்பாக கட்சித் தலைமைகள் கேட்டதற்கு சபையின் எதிர்காலம் தொடர்பாகவே சென்றதாக வழமை போன்று மழுப்பலுடன் தப்பிவிட்டார்.

என்ன கதைத்தார் எதைக் கிழித்தார் என்பதை ஹிஸ்புல்லாவின் பிரத்தியேக செயலாளர் ராசிக்கை கேட்டால் தெரியும்... அல்லது அதையும் எடுத்த பிரசுரித்தால் வருங் காலத்தில் இலகுவாக இருக்கும்.

இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள்... அப்பாவி தமிழர்களுக்காகவா அல்லது ஹிஸ்புல்லாவிற்காகவா...

(Batticaloa Campus) அமைவதற்கு முக்கிய காரணமாக அக்கால பகுதியில் மாவட்ட செயலாளராக இருந்த சார்ல்ஸ், வாகரை பிரதேச செயலாளர் ராகுல நாயகி ஆகியோரையே சாரும்.

பல சலுகைகளையும், பண மூட்டைகளையும் பெற்ற ராகுல நாயகி இவருக்கு பல பிரதேச சபைகளின் காணி விடயங்களை கொடுத்துள்ளமை நிரூபணமாகியுள்ளது.

(Batticaloa Campus) வளாகம் அமைவது தொடர்பில் ராகுல நாயகி ஆற்றிய பணியினை ஹிஸ்புல்லாவின் பிரத்தியேக செயலாளரை கேட்டுப்பார்த்தால் நன்கு தெரியும்.

இப்படியான நிலையிலேயே தற்போது இவ்விடயத்தினை அரசாங்கம் கையிலெடுத்து உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் குறித்த (Batticaloa Campus) ஐ கொண்டு வருவதற்கு இலங்கையின் அரச இயந்திரத்திற்கு கூட பல மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சு இதனை கையிலெடுத்தாலும் இதன் அதிபதி ஹிஸ்புல்லாவே. காரணம் பல மில்லியன் பணத்தினை கொட்டியுள்ளார்.எனவே அனைவரும் வாய் மூடி மௌனிகளே.

அதற்கு அப்பால் இதற்கு உதவிய தமிழர்களை நினைத்து தமிழ் சமூகமே வெட்கித் தலை குனியும் ஒரு பரிதாப நிலை இருக்கின்றமை. தமிழர்களுக்கு ஒரு வேதனையான விடயமாகும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களிற்கு சட்டத்திற்கு முரனான வகையில் உதவும் பல தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் விபரம் ஆதாரங்களுடன் கிடைத்துள்ளது விரைவில் அவை பகுதி.. பகுதியாக பிரசுரிக்கப் படும்..

இங்கு முக்கியமான விடயம் முஸ்லிம் மக்களிற்கு எதிராக செயற்படும் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் அரச அதிகாரிகளின் விபரமும் ஒழுங்கு முறைப்படி பிரசுரமாகும் என்பதை வாசகர்களின் கவனத்திற்கு அறியத் தருகிறோம்.

நீங்களும் ஏதாவது குறைகளை அறிவீர்களானால் எமது தளத்திற்கு அதாரங்களுடன் அனுப்பி வைத்தால் அது பிரசுரிக்கப் படும்

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149