எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Sunday, June 9, 2019

சுவிஸ் நாட்டில் வாழும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

சுவிஸ் நாட்டில் வாழும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி உத்தியோக பூர்வமாக சுவிஸ் நாட்டில் உதயம்.

சுவிஸ் நாட்டிலே வாழுகின்ற கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தயவாக என்னுடன் தொடர்புகொள்ளவும். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அமைச்சரவைப் பதவிக்கும் தகுந்தவர்கள் தேவை . 

எதிர்வரும் சில நாட்களில் எனது பொறுப்பில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு மாகாண அணிக்கு அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அணி நியமனம் இடம்பெற இருக்கின்றது. சுவிஸ் நாட்டிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணி முதன் முறையாக அங்குராற்பணம் உலக வரலாற்றில் இலங்கை கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்படுகின்றது.

அதில் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த உங்களை இணைத்துக் கொள்ளுகள். ஒரு பெரும் அமைச்சரவையை உருவாக்க இருக்கின்றது அதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெற்றோர்களும் உங்களது பிள்ளைகளையும் இந்த அமைச்சரவையில் இணையுங்கள். இது உங்களது பிள்ளை எதிர்காலத்தில் கிழக்கு மண்ணின் சிறந்த அரசியல்வாதியாக்கி அவர்களை நமது மண்ணைக் காக்கும் ராஜதந்திரிகளாக உருவாக்க வேண்டியது எனது கடமை.

சர்வதேசத்தில் நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கிழக்கு மாகானத்தவராக இருந்தால் நீங்கள் உங்களை எனது அவையில் பாராளுமன்ற உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம். என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சர்வதேச அனுசரணையோடு கிழக்கு மண்ணைத் தக்க வைக்க எனது தலைமையில் பாரிய ஒரு புத்தி ஜீவிகள் அணி செயல்ப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அபகரிக்கப்படும் நமது கிழக்கு மண்ணை நாமே சட்ட பூர்வமாக காப்பாற்றவே இந்த அணியை நான் உருவாக்கினேன் இது சாதாரண அணியல்ல இது சர்வதேச ரீதியாக கடந்த எட்டுவருடங்களாக செயல்ப்பட்ட அமைப்பின் நான் ஒருவனே உத்தியோக பூர்வமான கிழக்கின் பிரதிநிதி..

சுவிஸ் நாட்டில் வாழுகின்ற கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து அமைப்புக்களும் இவ்விடயத்தில் கண்ணோக்கி செயல்ப்படவும் உங்களை சர்வதேச தரம் வாய்ந்த கிழக்குமாகானத்தவனாக நான் மாற்றிக் காட்டுகிறேன் உங்களை என்னோடு இணைத்துக் கொள்ளுங்கள்.


எதிர்வரும் சில நாட்களில் கிழக்குமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தலா 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசின் உத்தியோக பூர்வ அனுமதியோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணியின்  உறுப்பினர்களாக கிழக்கு மண்ணில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள், 

அவர்களோடு கிழக்கு மாகாண சிங்கள மக்களின் நலன் கருதி அவர்களின் நலனுக்காகவும் இரண்டு சிங்கள புத்தி ஜீவிகள் எங்களது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு அணியுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

இதனுள் தங்களை இணைக்காதவர்கள். எல்லாம் முடிந்தபின் என்னை பயித்தியம், டம்மிப் பீஸ் என்றெல்லாம் விமர்சிக்க வேண்டாம். தமிழகத்தில், டெல்லியில், மலேசியாவில் மிகவும் பெருமதியுடனான தகுதி வாய்ந்தவர்கலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு மாகாண அணியுடன் சேர்ந்து கவுரவ பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாவீரர் போராளிகள் மற்றும் மற்றும் வடக்கு வாழ் தமிழர்களின் நலனுக்காகவும்.. வடகிழக்கு தமிழ் மாவீரர் நலன்களுக்காகவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் அக்கறையுள்ள அனைவரும் உங்களை எங்களுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அந்த மக்களுக்கு சேவை செய்ய முன் வருமாறு வடமாகாணத்தைச் அனுதாபிகளை வேண்டுகிறேன். நன்றி உண்மையுள்ள.

மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)

OUR WEB PARTNERS

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149