எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, July 8, 2019

இராணுவம் உட்பட 5 பேர் யாழில் கைது -ஹெரோயின் போதை பொருள் மீட்பு

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் உள்பட 5 பேரிடமிருந்தும் ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். 


அவர்களில் ஒருவர் பலாலி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இராணுவத்தில் சேவையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் என விசாரணைகளில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் ஐவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149