எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Sunday, July 7, 2019

நாடு கடந்த தமிழீழ அரசின் "மாற்றுஅணி" உருவாக்கம் : உருத்திரகுமரன் அணி சிதைந்தது.!

அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "கிழக்குமாகாண அணி" என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று சுவிஸ்ரீ நாட்டில் இருந்து உதயமாகியிருந்தது. குறித்த அமைப்பானது உருத்திரகுமரன் தலமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைப்பில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட ஒரு தனியான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கை புறக்கணித்து வந்த உருத்திரகுமரனுக்கு எதிராக இந்த அமைப்பு தொடங்கபட்டு கிழக்கு மண்ணிற்கான தனது தனியான அமைப்பை கட்டமைத்து உள்ளக செயற்பாடுகளை செய்து வந்த நிலையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது :-  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் "கிழக்குமாகாண" அணிக்கான ஆதரவும் விமர்சனங்களும் பெருகிக்கொண்டு வந்த நிலையில் குறித்த அணி கிழக்கு என்ற பெயருடன் ஒரு தனியான பிரதேசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை  பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.


எனவே இதற்கான சரியான காரணத்தை திரு.மார்க்கண்டு தேவராஐh பல்வேறு தடவைகள் குறிப்பிட்டிருந்தாலும் வடமாகணத்தை சேர்ந்த பலராலும் வடமாகாணத்தை சேர்ந்த பல்வேறு புலம்பெயர்  உறவுகள் மற்றும் புத்திசீவிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெயர் மாற்றம் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உருத்திரகுமரன் தலமையில் இயங்கிய முன்னாள் வடமாகணத்தை சேர்ந்தவர்களே  இந்த புதிய அமைப்பை வடக்கு கிழக்கு இணைந்ததாக மாற்றுங்கள் நாமும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம் என்ற வேண்டுகோளுக்கு இணங்க தற்போது இந்த அணி "தமிழீழஅரசாங்கத்தின் - "மாற்றுஅணி" என்ற பெயரில் இயங்க ஆரம்பிப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் வெறும் கிழக்கிற்கான தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு வடகிழக்கு இணைந்த அணியாக தோற்றம் பெற்றுள்ளமை பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

எனவே அணியின் பெயரை வைத்து "பிரதேசவாதம்" என வாதம் புரிந்தவர்களையும் தவறான விமர்சனங்கை முன்வைத்தவர்களையும் சற்று மூக்குடைய வைத்திருக்கிறது இந்த புதிய அறிவிப்பு.

குறித்த அணியின் உள்ளக செயற்பாடுகள் மிகவும் தீவிரமான முறையில் இலங்கை அரசின் முழு ஆதரவுடனும் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் எதிர்வரும் புதன்கிழமை இந்த அமைப்பிற்கான புதியபிரதமர் பகிரங்கமாக அறிவிக்கப்பட இருக்கிறார் என்பதையும் மார்க்கண்டு தேவராஐh குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அனைத்து விதமான நிர்வாக கட்டமைப்புகளும் பலப்படுத்தப்பட்டு இதன் உறுப்பினர்கள் அமைச்சர்கள்  அறிவிக்கப்பட இருக்க்கிறார்கள். இந்த அமைப்பின் மீது சேறு பூச நினைத்து பிரதேசவாதம் இனவாதம் பேசும் சிலருக்கு குறித்த அணியில் பிரதமராக ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரே நியமிக்கப்பட இருக்கிறார் என்பதும் பெரும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

மேலும் குறித்த மாற்று அணியில் சிங்களவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னுமொரு சிறப்பு அம்சமாக இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்லாமல் இலங்கையில் மிகச்சிறந்த ஆளணி பலம்மிக்க இளைஞர் படையோடு  இந்த அணி தினம் தினம் பட்டை தீட்டப்பட்டுக்கொண்டே வருகின்றது.

வெகுவிரைவில் சகல உள்ளக நடவடிக்கைகளும் பூர்த்தியான பின்னர்  வடகிழக்கு இணைந்த தமிழர்கள் மத்தியில் நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் "மாற்றுஅணி" மிகச்சிறப்பாக செயற்பட இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் குறித்த அணிக்கான பொறுப்பை "கிரி" என்ற இளைஞன் தலமையில் செயற்படுத்தப்படுகின்றதாகவும் மேலும் கிழக்கு மாகாணத்தில் 20-35 வயதுக்கு உட்பட்ட  இளைஞர்கள் அணி தயாராக  உள்ளக செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க்கண்டு தேவராசா  அறிவித்துள்ளார் .

பல்கலைக்கழக இளைஞர்கள் - ஊடகவியளாளர்கள் - சட்டத்தரணிகள் உட்பட புத்திசீவிகள் உள்ளடங்கிய குழுவாக இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தனது கட்டமைப்புகளை விரிவு படுத்தியுள்ள இந்த அணியின் செயற்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149