எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, July 8, 2019

மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவுள்ளேன் என்பதில் உண்மையுமில்லை.-அனுசா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் விலகப்போவதாகவும்,தனி கட்சி அமைக்கப்போவதாகவும்,அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்து செயப்படப்போவதாகவும், பல்வேறு செய்திகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகின.

ஆனால் நான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவோ அல்லது பதியகட்சி ஒன்றை உருவாக்கவோ,அல்லது வேறு கட்சியில் இணைந்து செயப்படவோ, போவதில்லை. என மலையக மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளரும் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியுமான அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

தலைவாக்கலை ஒளி ரூட் மற்றும் ஸ்டேலின் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு எரிவாயு.மெட்ரஸ்,உட்பட சமையலறை பாத்திரங்கள் ஆகிய வழங்கும் நிகழ்வு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஒளிரூட் என்பது எனது தந்தையின் ஆதரவாளர்கள் பலர் நெருக்கமாக இருந்த தோட்டம்.நான் உங்களிடம் கூற விரும்புவது மலையக மக்கள் முன்னணி உணர்வுகளாலும் உணர்ச்சிகளால்,கொள்கைகளாலும் எனது தந்தையாலும் உங்களாலும் தோற்றுவித்த கட்சியாகும்.

ஆகவே இதனை விட்டு வெளியில் செல்லவோ அல்லது மலையக மக்கள் முன்னணியிலிருந்து என்னை பிரிக்க எவராலும் முடியாது.அதற்கு நான் ஒரு இடமளிக்க மாட்டேன்.என்றும் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அமைப்பை பலப்படுத்த பயனிப்போம்.எந்த பிரச்சினையாலும் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதுடன் எனது தந்தை முன்னெடுத்த சகல அபிவிருத்தி மற்றும் ஏனைய பணிகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149