எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, July 8, 2019

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் முக்கிய காரணத்தை வெளியிட்ட விஜேதாச ராஜபக்ஸ

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டமையே  கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்றமைக்கான காரணம் எனவும், இதனை பேசுவதற்கு பலருக்கும் பயமாக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

தேசிய வீரர் எட்வட் ஹென்ரி பேத்ரிஸின் 104 ஆவது நினைவு தின நிகழ்வு 07th இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.


சீனாவுடன் இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. அமெரிக்கா, ஜப்பான் என்பனவும் எதிர்ப்பு வெளியிட்டன. இதற்குக் காரணம் தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதனாலாகும்.

இலங்கை காணியை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பிலான சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பத்தை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் பலவந்தப்படுத்தி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தான் அமைச்சரவையில் இருக்கும் காலத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற இடமளிக்க வில்லையெனவும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்பொழுதுள்ள எந்தவொரு தலைவர்களும் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர் எனவும் அவர் குறிப்பிட்டார்.  (

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149