எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, July 9, 2019

நாடு கடந்த தமிழீழ அரசின் மாற்று அணியின் செய்திட்டம் வெளியீடு.!!

அண்மையில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் "மாற்றுஅணி" தொடர்பான செயற்திட்டங்களை உள்ளடக்கிய செய்திக்குறிப்பு ஒன்று எமது ஊடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தொடர்பான செய்திக்குறிப்பு லங்காமுரசு வாசகர்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாற்று மாகாண அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு மார்க்கண்டு தேவராஜா அவர்களின் தலைமையில் சர்வதேச நிறைவேற்றுக்குழுவின் குழுவினூடாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில். பூரண சம்மதத்துடன் கீழ் வரும் விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.1-நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாற்று  அணிக்காக திடமான ஒரு ஆளணியை இலங்கையில்  உருவாக்குதல்.

2.சட்டபூர்வமான வேலைத்திட்டங்களை வடகிழக்கு  மாகாணம் பூராகவும்  ஆள்புலத்தை  தக்கவைக்கும் செயல்ப்பாட்டை ஆக்கபூர்வமாக முன்னெடுத்தல்.

3.இலங்கை தமிழர்கள் சார்ந்த தென்கிழக்கு அணியாக தமிழகத்தில் சிறந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட சிறந்த செயலணியை உருவாக்குதல்.

4.தமிழ் சிங்கள ஊடகத்துறையை உள்வாங்கி அதனூடாக வடகிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையை மக்கள் மத்தியில் தெளிவு படுத்துதல்.

5..நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வடகிழக்குமாகாண  செயலணி தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் செயல்த்திட்டங்களை வரையறை செய்தல் 

6.தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ  பாராளுமன்ற உறுப்பினர்களது செயல்த்திட்ட வரையறையை அவர்களுடன் உரையாடி உருவாக்குதல்.

7.இலங்கையில் செயல்த்திட்டங்களை செயல்ப்படுத்தும் ஒரு குழுவை தேர்வு  செய்தலும்  பரிந்துரை செய்தலும் அதற்க்கான சிறப்புக் குழுவை ஒருங்கிணைத்தலும் அதற்க்கான அதிகாரங்களை வரையறை செய்து நடைமுறைப்படுத்தல்.

என 7 விடயங்கள் முன்வைக்கப்பட்டு  நிறைவேற்றுக் குழுவினரால் ஏகோபித்த ஒப்புதலுடன் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை எதிர்கால செயலமர்வுக்கு முன் பிரதமரைத் தேர்வு செய்து பரிந்துரை செய்தல்.

பிரதமர் தெரிவானதும் சர்வதேச ரீதியாக  செயல்ப்பட அமைச்சரவை உருவாக்கம் பெற்று சிறப்புற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமாக  சர்வதேசத்தில் செயல்ப்பட வைப்பதுடன் இதை ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவு செய்து சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்ய வசதியாக எங்களுக்கு ஒரு அங்கீகாரம் பெற்ற தொண்டு அமைப்பும் இருக்கின்றது.

Mr-Markandu Devaraja
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
நாடுகடந்த தமிழீழ அரசின் "மாற்றுஅணி"
09.07.2019
 

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149