எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Saturday, July 13, 2019

கிழக்கில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாரா பிள்ளையான் - சில கேள்விகள்..

சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாவார்கள், சிலர் ஆக்கப்படுவார்கள், சிலர் ஒருசிலரின் தேவைக்காக பலிக்கடாவாக்கப்படுவார்கள்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு இளைஞனின் கதை இது ......

அந்த இளைஞன் வேறுயாருமல்ல கிழக்கின் முதலாவதும் இறுதியுமான தமிழ் முதலமைச்சர் #பிள்ளையான் என அறியப்பட்ட திரு சிவனேசதுரை சந்திரகாந்தன் (இது வெள்ளையடிப்பு அல்ல) தெரிந்துகொள்ளப்படவேண்டியவர்களில், சந்திரகாந்தனும் ஒருவர், தமிழ்த்தேசியப்போர் தந்தைசெல்வாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் அதர்க்காக பலிகொடுக்ப்பட்ட உயிர்கள் ஏராளம், 

தமிழர்களை காப்பாற்றுகிறோம் என்று களமிறங்கிய அத்தனை இயக்கங்களும் தமக்கு உதவமாட்டார்கள் என்பவர்களை தீர்த்துக்கொண்டேயிருந்தார்கள், அவர்கள்,இதில் எந்தவொரு இயக்கமும் சளைத்தவர்கள் அல்ல என்பதே மறுக்குமுடியாத உண்மை , ஆனால் ஒரு சம்பவம் தமிழர் போராட்டத்தை திசைதிருப்பியது ,அதுதான் புலிகளின் பிளவு அந்தப்பிளவு.

ஒரு சாராரால் தமிழர் நலன்சார்ந்த விடயமாக சொல்லப்பட்ட. போதும் தமிழர் போராட்டம் நல்ல விலைக்கு விற்க்ப்பட்டதென்பதே உண்மை... சிங்களம் காப்பாற்றுமென கிளம்பிய டெலோ உட்பட அனைத்து இராணுவக்குழுக்களும் இடைநடுவில் இராணுவத்தாலும் மாறிமாறி வந்த அரசுகளாலும் நட்டாற்றில் கைவிடப்பட்டார்கள் ....

இந்த இடத்தில் அவர்கள் ஒன்றை உணர்ந்திருப்பார்கள், தமிழர் நலன்சார்ந்து சிங்கள பேரினவாதம் ஒருபோதும் சிந்திக்காது தங்களை பகைடைக்காய்களாகவே பயண்படுத்துவார்கள் என்ற கசக்கும் உண்மைதான் அது ... தராகி சிவராம், உட்பட்ட சிலர் தமிழ்த்தேசிய தலைமையில் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு காரணமானது,

எதிரிகளாக நினைத்தவர்களை புலிகள் பலமாக இருந்தபோதே மன்னித்து உறுதிமிக்கதும் நேர்த்தியானதுமான அரசியல் பாதைக்கு வித்திட்டார்கள், தலைமை ஆயுதபலத்தால் தாம் தோற்கடிக்கப்படுவோம் என உணர்ந்திருந்தாரோ தெரியாது ..

ஆம் இந்த மாற்றங்களுக்கிடையில் தடம்புரண்டுபோன பலபேர்.. ஆம், அந்த இளைஞனை பாடசாலைக்காலங்களில் கண்டிருக்கிறேன், மிகவும் வேகமாக வாகனத்தை செலுத்தும் ஒரு துடிப்புள்ள இளைஞன், பலமுறை எங்கள் தோட்டத்துக்கு வந்து தண்ணீர் ஏற்றிச்சென்றதையும், சில நேரங்களில் கிணரு சுத்தம் செய்யவென தண்ணீர் பம்ப் எடுத்துக்கொண்டு போனதையும் பார்த்திருக்கிறேன்,

விடுதலைப்புலிகளின் கரடியனாறு பாண் பேக்ரி சாரதி விடுமுறையென்றால் அதன் சாரதியாக அந்த இளைஞன் வாகனம் ஒடுவதையும், போராளிகள் அந்த இளைஞனைப்பற்றிப்பேசுவதையும். பதுளைவீதியில் அந்தப்பெயருக்கு ஒரு மெளசு இருந்ததையும்...பலர் அறிவார்கள், ஆனால் அப்பா , அம்மா. தம்பி என்கிற, மரியாதையும் பள்ளிக்கூட பிள்ளைகளைக்கண்டால் வாகனத்தில் ஏற்றி இறக்கிவிடுவதும், பலரிடம் இல்லாத குணமாகவே பார்க்கப்பட்டது ,

நல்ல போராளிகளில் அவனும் ஒருவன் என்பதை நேரில் கண்டவர்க ளுக்குத்தெரியும், விடுதலைப்புலிகளின் பிரிவுக்குப்பின்னர் தரவை மாவீரர் துயிலுமில்லத்தை இராணுவம் உடைக்கிறது அதை கருனா தரப்பு கண்டுகொள்ளவில்லையென்றதும் முன்னனிப்போராளிகளில் ஒருவனான அவருக்கும் கோபம் வந்திருக்கிறது ...

இப்படிப்பட்ட எளிமையான வாழ்கைப்போக்கை கொண்ட ஒருவன் கிழக்கை ஆழவருகிறான் என்றதும் படுவான்கரை மக்கள் பெரிதும் சந்தோசப்பட்டார்கள் காரணம் வலியை உணர்ந்தவன் அந்த வலியை பிறருக்கு கொடுக்கமாட்டான் என்பதுதான் அந்த மனநிலைக்கு காரணம், என்னதான் புலிகள் பிளவு கிழக்காரைதனிமைப்ப டுத்தினாலும் , ஆட்சியில் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டு முதலமைச்சராக தமிழன் என்றதும் பெரும்பாலும் சந்தோசப்பட்டார்கள்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையை சந்திரகாந்தன் சரிவரப்பயண்படுத்தியிருந்தால் தமிழ்மக்களின் மனங்களை வென்றிருக்கலாம் .. ஆனால் அவர் சார்ந்திருந்தோர் அதர்க்கான முனைப்புக்காட்டவில்லையென்பதோடு, தமது ஆதிக்கத்தை செலுத்தவே முற்ப்பட்டார்கள், ஆளுமைமிக்க ஒரு இளைஞனை வளிநடத்தியவர்கள் அதர்க்குப்பொருப்பானவர்கள், ஆயுதக்குழுக்களாக இருந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏன் எதர்க்காக அவை திருப்பபட்டது என்பதை அப்போது அவர் உணர்ந்திருக்காவிட்டாலும் இப்போது உணர்ந்திருப்பார்.

திடீர் விசுவாசிகளான சிலரின் விசுவாசம் நேர்மையாக வாழும் உண்மையாக நேசித்த தமிழர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது அதுவே கிழக்கில் அரசியல் ரீதியாக தலைமைகளை ஒன்றிணைக்க தடையாகவும் இருக்கிறது, எது எப்படியோ சிலர் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள், கிழக்கில் பிரிவினைகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவதாயின் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியும் அதில் பங்கெடுக்க வேண்டும் என்பது இப்போதைய நிர்ப்பந்தம்

அப்படியாயின் அங்கிருக்கும் நச்சு செடிகள் அகற்றப்பட்டு ஜனநாயக நீரோட்டத்தில் புதிய கட்டமைப்புடன் பயணிக்க தயாராகவேண்டும், காலமாற்றத்தில் இணைந்து செயல்படத்தயாரானால் மட்டுமே,சிலதை சாத்தியப்படுத்தலாம் சிலருக்கு இது கசக்கும் ... பட், இதுதான் உண்மை, கட்சி பேதங்களை மறந்து தமிழர்களை காப்பாற்றியே ஆகவேண்டும் ... 

அன்டனி

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149