எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Monday, July 8, 2019

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் பிரபாகரன் : கைதாகிய நருக்கு நடந்தது.?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணிக்கும் வீதியில் யாழில் இருந்து வெளிவரும்வார இதழினை விநியோகத்திற்காக கொண்டு சென்றவேளை வீதிசோதனையின் போது வார இதழ் வினியோகத்தர் ஒருவரை படையினர் பிடித்துள்ளனர்.

குறித்த வார இதழ் இம்முறை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அட்டைப்படத்துடன் வெளியான நிலையில் வர இதழினை விநியோகத்திற்காக கொண்டு சென்றவேளை வீதிசோதனையின் போது குறித்த நபரை பத்திரிகைகளுடன் பிடித்துள்ளனர்.



இச்சம்பவம் நேற்று ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதியில் நடைபெற்றுள்ளது.

பின்னர் குறித்த பத்திரிகை விநியோகத்தரை படையினர் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரை கைதுசெய்வதற்கான எந்த சான்றும் இல்லாதநிலையில் விடுவித்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தினை அட்டைப்படமாக குறித்த வார இதழ் வெளியிட்டுள்ளதால் அச்சம் கொண்ட படையினர் குறித்த இதழ் விநியோகத்தரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149