எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Tuesday, July 9, 2019

அரசை ஆத­ரிப்­பதா? இல்­லையா? – கூட்­ட­மைப்பு முடிவு நாளை!

அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பதா? எதிர்ப்­பதா? அல்­லது நடு­நிலை வகிப்­பதா? என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை.

நாளை வியா­ழக்­கி­ழமை காலை 10 மணிக்கு நடை­பெ­றும் நாடா­ளு­மன்­றக்­கு­ழுக் குழுக் கூட்­டத்­தி­லேயே இது தொடர்­பில் முடி­வெ­டுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் நேற்­றி­ரவு தெரி­வித்­தார்.

அர­சுக்கு எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீது இன்­றும் நாளை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. நாளை மாலை 6 மணிக்கு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு பொது எதி­ர­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளும், சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளும் தீர்­மா­னித்­துள்­ள­னர்.ஆனால், இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்­ன­மும் தமது நிலைப்­பாட்டை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. கூட்­ட­மைப்­பின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் முடி­வில்­தான் பிரே­ர­ணை­யின் வெற்றி, தோல்வி தங்­கி­யுள்­ளது.

இந்­த­நி­லை­யில், கல்­முனை வடக்­குப் பிர­தேச செய­ல­கத்­தைத் தரம் உயர்த்­தும் விட­யம் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் தலமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் இடை­யில் அலரி மாளி­கை­யில் நேற்­று­முன்­தி­னம் திங்­கட்­கி­ழமை மாலை சுமார் இரண்டு மணி நேரம் பேச்சு இடம்­பெற்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோரே இந்­தப் பேச்­சு­க­ளில் கலந்­து­கொண்­ட­னர். இதன்­போது, அரசு மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்த்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்க வேண்­டும் எனப் தலைமை அமைச்­சர் கோரி­யி­ருந்­தார்.

தங்­கள் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று) கொழும்­புக்கு வந்­த­தும் அது குறித்­துத் தாங்­கள் கூடி ஒரு முடிவை எடுத்து அறி­விப்­பார்­கள் என்று பிர­த­ம­ரி­டம் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தின் அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் தீர்­மா­னம் எடுத்­தீர்­களா? என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னி­டம் நேற்­றி­ரவு ‘உத­யன்’ வின­வி­யது.

இதற்­குப் பதி­ல­ளித்த அவர், “தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் இன்று (நேற்று) நடை­பெற்ற போதி­லும் அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பதா? எதிர்ப்­பதா? அல்­லது நடு­நிலை வகிப்­பதா? என்­பது தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை. வியா­ழக்­கி­ழமை (நாளை) காலை 10 மணிக்கு நடை­பெ­றும் நாடா­ளு­மன்­றக்­கு­ழுக் குழுக் கூட்­டத்­தி­லேயே இது தொடர்­பில் முடி­வெ­டுக்­கப்­ப­டும்.-என்­றார்.

Loading...

இணைய விளம்பரங்கள்

விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149