எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Saturday, August 10, 2019

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபரின் நடமாட்டம்

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் நள்ளிரவில் இனந்தெரியாத ஒரு சிலர் கடந்த சில தினங்களாக நடமாடுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். மட்டக்களப்பில் நடைபெற்ற சஹ்ரான் குழுவின் குண்டுத்தாக்குதலை அடுத்து இன்னும் அங்குள்ள மக்கள் ஒருவித பதட்டத்துடனையே வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர் பகுதிகளில் மட்டுமின்றி நகரை அண்டிய சில கிராமங்களில் கூட இன்னும் பதட்டம் நிலவி வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவால் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெறும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாமாங்கம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அங்குள்ளவர்கள் மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமான ஒருவரின் நடமாட்டம் இடம்பெற்றுள்ளது. மாமாங்கத்தில் உள்ள சகாயமாதா கோவில் நிகழ்வுகள் இடம்பெறும் இந்த வேளையில் குறித்த நபரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக நேரில் கண்ட இளைஞன் தெரிவித்தார்.

மேலும் தோளில் பக்கவாட்டில் போடப்பட்ட கறுப்பு நிற பையுடன் அந்த வீதியின் நெடுகிலும் ஒவ்வொரு வீடாக அவதானித்துக்கொண்டு குறித்த நபர் சென்றதாகவும் இவர் மாமாங்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இதுவரை காணாத ஒரு நபர் எனவும் குறித்த இளைஞன் தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் குறித்த மர்ம நபரை உடனடியாக இரு இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்றவேளை சற்றுதூரத்தில் சென்ற மர்ம நபர் திடீரென எங்கே ஓடி மறைந்தாகவும் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எச்சரிக்கையின் இரு தினங்களுக்கு பின்னர் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றமை சற்று பதட்டத்தை அதிகரித்துள்ளதாக அங்குள்ள இளைஞர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் கடந்த தீவிரவாத தாக்குதல்கள் கிருஸ்தவ தேவாலயங்களை மையமாக கொண்டே நிகழ்த்தப்பட்டிருந்தது. எனவே தற்போதும் மாமாங்கம் சகாயமாதா தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இடம்பெற்று  வருகின்ற வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மாத்திரம் இன்றி மாமாங்கம் - அதனை அண்டிய கூழாவடி போன்ற பிரதேசங்கள் கிருஸ்தவர்கள் அதிகமாக செறிந்து வாழும் பிரதேசங்கள் என்பன குறிப்பிடத்தக்கது.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149