எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD ADD ADD ADD
Published On:Saturday, August 10, 2019

துப்பாக்கி முனையில் மருமகளை வன்புணர்வு செய்த அரசியல்வாதி

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரை மிரட்டியதாகவும் முன்னாள் டில்லி பாஜக எம்.எல்.ஏ. மீது டில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள்ளது.

பாஜக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் ஷோகீன் ( MANOJ SHOKEEN) துப்பாக்கி முனையில் தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியதாக அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 மற்றும் 506 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

மனோஜ் ஷோகீன் டில்லியின் நாங்லோய் சட்டமன்றத் தொகுதியில் (NANGLOI ASSEMBLY) இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர்மீது அவரது மருமகள் மீரா பகத் கொடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று காவல்துறையை அணுகிய ஷோகீன் மருமகள் மீரா பகத், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அன்று தனது கணவர், சகோதரர் மற்றும் ஒரு உறவினருடன் தனது தாய் வீட்டை விட்டு வெளியேறி, மீரா பாக் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாகவும், ஆனால், அவர்கள், தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவரது கணவர் பாசிம் விஹார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், “நாங்கள் ஹோட்டலை அடைந்தபோது, ​​புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட எனது உறவினர்கள் சிலர் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். விருந்துக்குப் பிறகு, ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் மீரா பாக் நகரில் உள்ள எனது மாமியார் வீட்டிற்குச் சென்றோம்.

என் கணவர் அவருடன் வெளியே சென்றார். நான் தூங்கச் சென்றபோது, அதிகாலை 1.30 மணி யளவில் அவரது மாமியார் ஷோகீன் அவளுடன் பேச விரும்புவதால் கதவைத் திறக்கும்படி கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து, தான் ஷோகீனின் அறைக்கு வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தன்னை ஷோகீன் தகாத முறையில் தொடத் தொடங்கினார்., அவர் குடிபோதையில் இருந்ததால், அவரை தூங்கச் செல்லும்படி வலியுறுத்தியதாகவும், ஆனால், அவர் துப்பாக்கியை வெளியே எடுத்து, என்னை அறைந்தார். நான் சத்தம் போட முயற்சித்தபோது, என் சகோதரனைக் கொலை செய்வேன் என்று மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து ஆரம்பத்தில் எனது திருமணத்தையும் எனது சகோதரரையும் காப்பாற்றுவதற்காக, அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை. இதற்கிடையில் எனது மாமியாரின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து சாகேத் நீதிமன்றத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (சிஏடபிள்யூ) பிரிவில் தனது தனது மாமியார் மீது வன்முறை வழக்கு பதிவு செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், ஜூலை 7 ஆம் தேதி, எனது தாயும் தந்தையும் ஷோகீனின் ஆட்களால் துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பாக சாகேத் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக நான் சாகேத் நீதிமன்றத்தை அடைந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதையடுத்து தனது புகாரை பதிவு செய்யயும்படி சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தற்போது பாஜக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் ஷோகீன் மீது இரண்டு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள துணை போலீஸ் கமிஷனர் (வெளி) சேஜு பி. குருவில்லா, “இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கி இருப்பதாகவும், தற்போது ஷோகீன் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் ஷோகீன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.

Loading...
Lankamurasu.com - ranking and value

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149