பிரதானசெய்திகள்

இத்தாலியில் இருப்பது பொட்டு அம்மானா இல்லை பிரபாகரனா..? நிஐம் இதுதூன்.!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் பரிசீலனையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக கசிந்துள்ள செய்தி திட்டமிட்ட பொய் பரப்புரையாக இருக்கலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உளவுத்துறையின் தலைவருமாக இருந்தவர் பொட்டு அம்மான் என்கிற சண்முகலிங்கம் சிவசங்கரன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பவராகவும் கருதப்பட்டவர் பொட்டு அம்மான்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரையும் சி.பி.ஐ சேர்ந்திருந்தது. இந்த நிலையில் 2010ம் ஆண்டு தடா நீதிமன்றம் சி.பி.ஐ அளித்த கோப்புகளை முன்வைத்து ராஜீவ் கொலை வழக்கில் இருந்து இறந்தவர்களான பிரபாகரன் பெயரும், பொட்டு அம்மான் பெயரும் நீக்கப்பட்டதாக அறிவித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு உடலை ஆதாரமாக காட்டிய இலங்கை அரசாங்கம், பொட்டு அம்மான் விஷயத்தில் அமைதி காத்து வந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக மாறிய காலத்தில் இருந்தே இலங்கை மற்றும் ரா உளவுப் பிரிவுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பொட்டு அம்மான்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களின் விடுதலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்த சில மணி நேரத்தில் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரி இத்தாலியில் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக பதிந்திருந்தார். அந்த ட்வீட் உடனே அவரால் நீக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி குறிப்பிடும் நபர் பொட்டு அம்மானாக இருக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வேகமாக பரவியது. இந்த தகவல் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ மூலம் பரப்பப்பட்டதாக இருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை நிராகரித்த செய்தியை நீர்த்து போக செய்யவும், இனி அதே கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழாமலிருக்கவும் ‘ரா’ இந்த செய்தியை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள் இந்த வழக்கை கூர்ந்து நோக்கி வருபவர்கள். பொட்டு அம்மான் உண்மையில் உயிரோடு இருந்தால், விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு உயிர்ப்புடன் இருக்கும் என்பது நிதர்சனம்.

(Visited 2,216 times, 1 visits today)
Open