நிகழ்வுகள்

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று (21.06.2018) வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருக்கதவு திறத்தல் இரவுப் பூசையுடன் உற்வவம் ஆரம்பமாகிறது.

தினமும் பகல் பூசை பி.ப ஒரு மணிக்கும் இரவுப் பூசையும் இடம்பெறும். மூன்றாம் நாளான 23 ஆம் திகதி சனிக்கிழமை அம்மனின் வெளி வீதி கும்ப ஊர்வலம் பாண்டிருப்பின் வடக்கு திசையில் இடம்பெறுவதுடன் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை கும்ப ஊர்வலம் தெற்கு திசையிலும் இடம்பெறும்.

ஐந்தாம் நாளான 25 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை 4.30 மணிக்கு பக்திப்பரவசமூட்டும் துலாக்காவடி நிகழ்வு இடம்பெறுவதுடன் ஆறாம் நாளான 26 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு திருக்குளிர்த்தி கால் வெட்டும் நிகழ்வும் இரவுப் பூசையைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு தவநிலை வைபவம் இடம் பெறும்.

ஏழாம் நாளான புதன்கிழமை மாலை சக்கரை அமுது வைபவம் திருக்குழந்தைகள் அழைத்துவரல் இடம்பெற்று இரவு ஏழு மணிக்கு சிலம்பொலி சலங்கை உடுக்கை மங்கள வாத்திய ஒலிகளுடன் திருக்குளிர்த்தி பாடப்பட்டு பூசைகளை தொடர்ந்து சமூத்திரத்தில் கும்பம் சொரிதலுடன் திருக்கதவு அடைக்கப்பட்டு உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

 

(Visited 9 times, 1 visits today)
Open