கட்டுரைகள் செய்திகள்

முள்ளிவாய்க்காலில் பிடிக்கப்பட்ட வெள்ளை கொடி ஏன் சிவப்பானது..??

இது 01-05-2009’வன்னிக் களமுனையெங்கும் தணல்பறக்கும் அனல்பிழம்பாக மாறியது. முள்ளிவாய்க்காலை அண்மித்த கரையோர கிராமங்களான மாத்தளன், பொக்கணை, வலஞ்ஞர்மடம் ஆகிய சிறு சிறு கிராமங்களை கைப்பற்றிய கொலைவெறி சிங்களப்படைகள்,கடற்கரையோரமாக முள்ளிவாய்க்காலை நோக்கி பாரிய தாக்குதலை தொடுத்தவண்ணம் இருந்தது.

இந்த தாக்குதலுக்கான எதிர்த்தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத்தபதியின் தலைமையில் சுமார் முண்ணூறுவரையான போராளிகளும்,தளபதிகளான லோறன்ஸ், வேலவன் உள்ளிட்ட இன்னும்சில தளபதிகள் உள்ளடங்கலான போராளிகளும் இந்த தாக்குதல் அணிகளை வளிநடத்தியவண்ணம் இருந்தார்கள்.

கடற்புலிகளின் கடல்தாக்குதல் அணிகளான சாள்ஸ் கடல்தாக்குதல் அணியும் மகளீர் கடல்தாக்குதல் அணியும் இணைந்து முள்ளிவாய்க்கால் கரையோரங்களை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இவர்களுக்கு உதவியாக கிட்டு பீரங்கிப் படைப்பிரிவினர் தமது இரண்டு ஆட்லறி பீரங்கிகளை கடற்கரைப்பகுதியில் அதாவது முளிளிவாய்க்காலின் நடுப்பகுதி கடற்கரையில் நிலமட்டத்துடன் நன்கு உருமறைத்து தரையிறங்க முயற்சிக்கும் சிங்களப்படைகளுக்கு சிம்மசொற்பனமாக இருந்தார்கள்.

இதுஇவ்வாறிருக்க ஆழ்கடிலில் நங்கூரமிட்டிருந்த சிங்கள கடற்படையின் அதிநவீன போர்க்கப்பல்களிலிருந்து (இந்திய,அமெரிக்க)முள்ளிவாய்கால் முழுவதும் கடுமையான றொக்கற் ஆட்லறி தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த போர்க்கப்பல்களுக்கு உதவியாக சுமார் நூறுக்கும்மேற்பட்ட சிறியவகை பீரங்கிப்படகுகளும் தமது பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்தன.

இதேவேளை புதுக்குடியிருப்பு, மந்துவில்,ஆனந்தபுரம்,பச்சை புல்மோட்டை ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றிய சிங்களப்படைகள்,முள்ளிவாய்காலை நோக்கி இரட்டைவாய்க்கால்பகுதியூடாக மிகக் கடுமையான தரைத்தாக்குதலை தொடுத்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிராக புலிகளின் அதிவிசேட படைப்பிரிவொன்று கடுமையான தாக்குதலை தொடுத்தவண்ணம் இருந்தது.
இதேவேளை விடுதலைப்புலிகளால் நந்திக்கடல் கரையிலிருந்து இரடடைவாய்க்கால் ஊடாக வலஞ்ஞர்மடம் முடிவிலான கடற்கரைவரை பாரிய மண் அணையொன்று போடப்பட்டிருந்தது. இந்த மண் அரணை கிட்டத்தட்ட ஒருநாளைக்கு நான்கு ஐந்து தடவைகள் சிங்களப்படைகள் உடைத்து உள்வருவதற்கு முயற்சித்தார்கள்.

ஆனால் அவர்களால் இந்த மண் அரணை உடைத்து உள்வரமுடியவில்லை.இந்த மண் அரணானது கிட்டத்தட்ட சிங்களப்படைகளுக்கு இன்னொரு முகமாலையாகவே இருந்தது.ஒவ்வொருமுறையும் இந்த மண் அரணை உடைப்பதற்கு சிங்கள படைகள் முயற்சிக்கும்பொழுது தமது உயிர்களை நூற்றுக்கணக்கில் இழக்கவேண்டியதாயிற்று.

மேலும் ஒவ்வொருமுறையும் சிங்களப்படைகள் தமது அதீத பலங்களை திரட்டியே இந்த மண்ணரணை உடைக்க எத்தனித்தார்கள்.ஒரு நாளைக்கு நான்கு தடவைக்குமேல் முயற்சிக்கும்பொழுதும் ஒவ்வொருதடவையும் சிங்கள விமானப்படையின் மிக் விமானங்கள் பாரிய குண்டுகளை போட்டு மண் அரணை உடைக்க முயன்றார்கள்.

ஒவ்வொரு முறையும் விமானத்தாக்குதல் நின்றவுடன்,அந்த மண்ணரணை நோக்கி நூற்றுக்கணக்கான ஆட்லறி,மோட்டார்,மல்ரிபரல்,கனொன் பீரங்கி,டாங்கிகளின் தாக்குதலென அந்தப்பகுதி முழுவதும் தீச்சுவாலையாக எரிந்துகொண்டிருந்தது.

மண்ணரணிலிருந்த போராளிகள் வீரமரணம் அடைய அடைய புதிய அணிகள் அவ் அரண்களை காத்து நின்றார்கள்.உண்மையில் இந்தத்தாக்குதல் என்பது எமது ஒன்றரை இலடச்சம் மக்களும் இருந்த பகுதிக்கு மிகவும் அருகாகவே நடந்துகொண்டிருந்தது.

மண்ணரணை சிங்களப்படைகள் தாக்கவரும் ஒவ்வொரு தடவையும் பல நூறு பொதுமக்கள் தமது உயிர்களை துறந்தார்கள்.அரணிலிருந்து சுமார் 200மீற்ரர் தொலைவிலேயே மக்களின் கூடாரங்கள் அமைந்திருந்தன;அதனால் குறுட்டு சிங்களப்படைகள் ஏவிய நூற்றுக்கணக்கான எறிகணைகள் 90 வீதமான மக்களின் கூடாரங்களிலும் பதுங்கு குழிகளிலுமே விழுந்து வெடித்தவண்ணமிருந்தன.

உண்மையில் எமது மக்கள் தமது இருப்பிடங்களை சுமார் இரண்டுகிலோமீறரர் நீளமான நிலப்பரப்புக்குள் சுமார் பத்துத்தடவைக்கும் மேல் இடம்பெயர்ந்து நகர்த்தவேண்டியஇருந்தது.சுமார் ஐந்து கிலோமீற்ரர் சுற்றளவைக்கொண்ட நிலப்பரப்பில் எங்கும் உயிர்ப்பாதுகாப்பில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தோம்.

சாவு என்பது எமக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் அவலங்களும்,அழுகுரல்கழும்,இறந்தவர்களும்,காயப்பட்டு இறக்காமல் துடிப்பவர்களுமென பெருத்த மரண ஓலம்தான்.ஆதலால் எல்லாம் பழகிவிட்ட நிலையில் ஒருவரை ஒருவர் துக்கம் விசாரிப்பதை அங்கிருந்த ஒருவர்கூட விரும்பவில்லை. போட்டுவாறன் என்று சொன்ன எவரும் உயிருடன் திரும்பி வந்ததை அங்கு நான் பார்க்கவும் இல்லை.

மேலும் முள்ளிவாய்க்காலின் மறு முனையான வட்டுவாகல் பாலத்தின் முள்ளிவாய்கால் பக்கமான பகுதியிலும்,நந்திக்கடற்கரையிலிருந்து பெருங்கடல் கரைவரையான பகுதியை ஊடறுத்தும் புலிகள் பாரிய மண்ணரணை அமைத்து சிங்களப் படைகள்மீது கடும்தாக்குதலை தொடுத்தவண்ணமிருந்தார்கள்.

இந்த களமுனையினை தளபதி பானு அவர்களே நேரடியாக வழிநடத்தியதுடன், ஏனைய இழநிலை தளபதிகள் உள்ளிட்ட போராளிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதேவேளை நந்திக்கடலின் மறுகரையான வற்றாப்பளை,கேப்பாப்புலவு,காட்டு அந்தோனியார் கோவில் பகுதிவரையான நீண்ட சிறுகடல் நீரேரி பகுதியும் பெரும் ரணகளமாக மாறியது.இத்த கடல் நீரேரியின் முடிவில் பெரும் பாதுகாப்புடன் சிங்களப்படைகள் தமது நிலைகளை அமைத்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் அகலம்கொண்டதும்,சுமார் மூன்று கிலோமீற்றர் நீளம்கொண்டதுமான சிறுகடல்கரைப்பகுதியினை மின்விளக்குகள்பொருத்தி காவல்காத்து நின்றதுடன்,அந்த கரைகளிலிருந்து முள்ளிவாய்க்காலின் மையப்பகுதிகளை நோக்கி சரமாரியாக தாக்கிக்கொண்டுமிருந்தார்கள்.

மேலும் இந்தப்பகுதியில் சிங்களப்படைகள் அதிநவீன ராடர் கருவிகளையும்,37எம் எம் பீரங்கிகளையும் பொருத்தி கடலால் தாக்கவரும் புலிகளை அழிப்பதற்காக தயார்படுத்திவைத்திருந்தது.

இதேவேளை அந்த சிறுகடற்பகுதியூடாக சிறிய படகுகளை பயன்படுத்தி சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலின் நடுப்பகுதிக்குள் கொமான்டோ தாக்குதலை நடத்தி உள்நுழையவும் முயற்சித்தார்கள்.ஆனால் இந்தப்பகுதியில் புலிகளும் தமது சிறியவகை தாக்குதல் படகுகளை பயன்படுத்தி சிங்களப்படைகளின் தாக்குதல்களை முறியடித்தவண்ணமிருந்தார்கள்.

நாலாபுறமும் இருந்து கொலைவெறியுடன் சிங்களப்படைகள்
தமது தாக்குதலை கண்மூடித்தனமாக தொடுத்தபோதும் போர் மெளனிப்பிற்கு முன்னதான ஒருசில நாட்களுக்கு முன்னர்வரை பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை.

இத்தனைக்கும் மத்தியில் சுமார் ஒன்றரை இலட்ச்சம்வரையான எமது மக்கள் பெரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். நந்திக்கடலின் முள்ளிவாய்க்கால் கரையோரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பதுங்கு குழிகளையும்,கூடாரங்களையும் அமைத்து நிலைகொண்டிருந்த சந்தர்ப்பத்தில்,

பெருங்கடற்பகுதியிலிருந்தும் மறுபுறம் வட்டுவாகல்பகுதியிலிருந்தும்,மற்றும் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட ந்ந்திக்கடலின் மறுபக்கத்திலிருந்துமாக மொத்தத்தில் நான்கு முனைகளாலும் கடுமையான தாக்குதலை இடைவிடாது சிங்களப் படைகள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்த நான்குமுனை தாக்குதலுக்கும் உதவியாக சிங்களப்படைகளின் கனரக ஆட்லறி பீரங்கிப் படையணிகளும்,பல்குழல் பீரங்கி படையணிகளும்,எம்.ஐ24..உலங்கு வானூர்திகளும்,மிக் விமானங்களும் இடைவிடாது கடும்தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தன.

இவ்வளவு தாக்குதல்களையும் எமது வீரமறவர்கள் தமது உயிர்களை அர்பணித்து எதிரியை துவம்சம் செய்துகொண்டிருந்தார்கள்.உண்மையில் ஒருநாளைக்கு ஐம்பதிற்கும் நூறிற்கும் குறையாத போராளிகள் தாய்மண்ணை முத்தமிட்டு மடிந்துகொண்டிருந்தார்கள்.அத்துடன் நூறிற்கும்,நூற்று ஐம்பதிற்கும் இடைப்பட்ட ஆண் பெண் போராளிகள் விழுப்புண் அடைந்துகொண்டிருந்தார்கள்.

இது இவ்வாறிருக்க களமுனைகளில் சில காமடிகளும் நிகழ்ந்தவண்ணம் இருந்தது”அது எமது வேதனைகளை சற்று மறக்கவைத்தது. அது என்னவெனில்,வட்டுவாகல் பகுதியிலிருந்த சிங்களப்படைகளுக்கும்,இரட்டைவாய்கால் பகுதியிலிருந்த சிங்களப்படைகளுக்குமிடையில் அடக்கடி மாறி மாறி miss fire நடைபெற்றுவந்தது.

அதாவது இரட்டைவாய்க்கால் பகுதியிலுள்ள புலிகளின் மண்ணவரை வந்துவிட்டு ஒவ்வொரு முறையும் சிங்களப்படைகள் கடுமையான இழப்புக்களுடன் பின்னோக்கி ஓடுவதும் ஒரு நாளைக்கு நான்கு தடவைக்கும் குறையாமல் நடைபெற்றுவந்தது.

அப்பொழுது மண் அரணில் ஏறும் டாங்கிகள் கடுமையான தாக்குதலை கண்மூடத்தனமாக நடத்திவிட்டு விடுதலைப்புலிகளின் துணிகர தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடுவதும் வழமையாக இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப்படைகளால் டாங்கிகளிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகள் எதிர்திசையில் அமைந்திருந்த அதாவது வட்டுவாகல் பாலத்திற்கு அக்கரையில் அமைந்திருந்த சிங்களப்படைகளின் நிலைகளில் போய் விழுந்து வெடித்தவண்ணம் இருந்தது.

இதையறியாத மோட்டு சிங்களப்படைகள் புலிகள் தம்மை தாக்குவதாக எண்ணி தாமும் பதில்தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்திவந்தார்கள்.

உண்மையில் இதனை நடுவில் இருந்து அவதானித்த மக்கள் இதை வடிவேலின் காமடியாக நினைத்தார்கள்.

இதற்கிடையே முள்ளிவாய்க்கால் நடுப்பகுதியில் உள்ள வெள்ளாம் முள்ளிவாய்க்காலிலிருந்து கரையாம் முள்ளிவாய்க்கால் செல்லும் கடற்கரை வீதியில் அமைந்திருந்த ஐ,பி,சி சந்தி என்று அழைக்கப்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்கள், பதுங்குகுழிகள் அமைத்து இருக்கையில் அந்தப்பகுதிநோக்கி சுமார் ஒரு மணித்தியாலம்வரை கடுமையான ஆட்லறி,மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதலை சிங்கள மிலேச்சப்படைகள் நடத்தியதில் சுமார் ஆயிரம் வரையான பொதுமக்கள் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டார்கள்.

மேலும் ஆயிரத்து ஐநூறுவரையான பொதுமக்கள் கடுமையான காயங்களுக்குள்ளானார்கள்’ இந்தத்த தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தசமயம்…..

இதன் தொடர்ச்சியை பாகம் இரண்டில் எதிர்பாருங்கள்…..!

தருபவர் : ஊடகப்போராளி- நீலன் நடராஜா

 

(Visited 90 times, 1 visits today)
Open