கட்டுரைகள் செய்திகள்

எதிரியிடம் இருந்து காட்டிலே ஈழப்புலிகளை பாதுகாத்த மிருகங்கள்.! நிஐ பகிர்வு.!!

காட்டிலே ஈழப்புலிகளை பாதுகாத்த மிருகங்கள்.!!  மட்டக்களப்பிலே சரியாக இடத்தின் பெயர் தெரியாது கருணா விடுதலைப்புலிகளை விட்டு தனியே சென்ற காலம் அது  காட்டுகளிலே அன்று புலிகள் தங்களது இரகசிய முகாம்களை வைத்திருந்தனர்.

மட்டக்களப்பு என்றால் மூன்று பிரிவுகள் இருந்தன ஒன்று சிறிலங்கா படை மற்றது கருணா குழு மற்றது எமது புலிகள் சேனை.

புலிகள் காடுகளிலே முகாம் அமைத்தால் மிருகங்களுக்கும் தெரியும் இவர்கள் இருப்பதனால் தங்களுக்கு 100வீதபாதுகாப்பு உறுதி என்று அவ்வாறு அமைதியா முறையிலே முகாம் அமைத்து இருப்பார்கள் இது புலிகள் சேனையில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒரு தடவை இவ்வாறு மட்டக்களப்பிலே இடத்தின் பெயர் தெரியாது காட்டிலே புலிகள் முகாம் அமைத்திருந்தனர் அங்கே சிறிலங்கா படையின் வேவு அணியொன்று அந்த முகாமைதாக்குவதற்கு திட்டம் தீட்டி வேவுத்தரவுகளை எடுப்பதற்காக புலிகளின் முகாமை குறிவைத்து நகர்ந்து 3 நாள் ஆகிவிட்டது இரவிலே தான் வேவு பார்க்க சாதகம் இரவினிலே புலிகளும் சரி எதிரியும் சரி வேவுப்பணியில் ஈடுபடுவது அதிகம்.

அப்படி ஒரு இரவு புலிகளின் முகாமை அண்மித்தது எதிரின் வேவு அணி  அந்த செல்லும் பதையிலே கரடி ஒன்று நின்றுவிட்டது இவர்கள் பயணம் செய்யமுடியாது நீண்ட நேரம் தடைப்போட்டுக்கொண்டிருந்த அந்த கரடியை அந்த வேவு அணி சைன்சர் பூட்டிய கைத்துப்பாக்கியால் குறிபார்த்து சுட அந்த கரடி இரத்தம் சிந்தியபடி எங்கு ஓடுவது என்று தெரியாது நேரடியாக புலிகளின் முகாமை நோக்கி ஓடத்தொடங்கியது கதரலுடன் கரடியின் சத்தம் எப்படி இருக்கும் அந்த இரவு நேரம். கரடியின் சத்தம் தங்களின் முகாமை நோக்கியே வந்த படி இருக்க இரவு சென்றியில் இருந்த புலிவீரர்கள் உற்பட அனைவரும் உசார் ஆனார்கள்.

அந்த கரடி தகரத்தையும் கிழித்த படி முகாமிற்குள்ளே புகுந்துவிட்டது புகுந்த கரடி கீழே விழுந்து விட்டது வேலி கரையோரமாக நேரம் 4:00 ஆக இந்த நேரத்தில் யார் கரடியை சுட்டது என்னும் சந்தேகம் எழுந்தது உடனே முகாமை சுற்றி ரோந்து அணி சென்றது அந்த அணி சென்றபோது 3 நாள் எதிரி தங்கியிருந்த தடையம் உற்பட அவர்களின் முக்கிய தடையங்களை கண்டனர் அவ்வாறு அந்த வேவு அணி அன்று கரடியை சுட்டு விட்டு ஓடியவர்கள் ஓடியதுதான் அதன் பின்னர் அந்த பக்கமே ஆக்களை காணவில்லை.

இப்படி காட்டிலே இருந்த மிருகங்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்தது.

ஆனால் இன்று இந்த நாட்டில் இருக்கும் சில மிருகங்களுக்கும் காட்டிலே இருக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் தெரியாது இருக்கின்றது.
நாட்டுக்குள்ளே இருக்கும் சிலமிருகங்களின் செயற்ப்பாட்டை பார்க்கும் போது மனதிற்கு வேதனையும் ஆத்திரத்தையும் தூண்டுகின்றது.

இந்த மட்டக்களப்பு சம்பவம் எனது நண்பன் எனக்கு தனது அனுபவத்தை கூறியபோதுதான் எனக்கு தெரியும் அதைத்தான்
நான் இன்று உங்களுக்கு……

வன்னியின்பன் ஈழம்

(Visited 1,003 times, 1 visits today)
Open