செய்திகள் பிராந்தியசெய்திகள்

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு. திருடர்கள் கைவரிசை வவுனியாவில் நேற்று மாலை 4 மணியளவில் தோணிக்கல் பகுதியில் கடை ஒன்றிற்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் அறுத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை 4மணியளவில் லக்சபாண வீதி, தோணிக்கல் பகுதியில் வீதியால் நடந்து கடைக்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த 2பவுணுக்கு அதிகமான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிலில் சென்ற இனந்தெரியாதவர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் திருடர்களைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து தனது சங்கிலியை இனந்தெரியாத மோட்டார் சைக்கிலில் சென்றவர்களினால் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Close