செய்திகள் பிராந்தியசெய்திகள்

புலிகள் புதைத்தது ஒரு ஆமையையா?: தலையை சொறிந்த இராணுவம்!

கிளிநொச்சியின் இரு இடங்களில் நேற்று விடுதலைப் புலிகளின் புதையல் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. அப்பகுதியில் உறுதியாக தங்கம் காணப்படுகின்றது என தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. குறித்த அகழ்வு பணியின் போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் காணப்பட்ட நீர் ஓடையில் விடப்பட்டது. அகழப்பட்ட மண் அதிகாலை 4 மணிவரை மூடப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

இதேவேளை கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணியின்போது எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் குறித்த அகழ்வு பணி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 32 times, 1 visits today)

Close