செய்திகள் பிராந்தியசெய்திகள்

மட்டக்களப்பில் விடுதியிலிருந்து தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி வேறு கிராமத்து வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 16 வயதான பாடசாலை மாணவியொருவரின் சடலத்தைத் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டு உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்கேணி – மயில்வாகனம் வீதியில் வசிக்கும் செல்வேந்திரன் நிரோனிகா எனும் 10 ஆம் தரத்தில் கற்கும் மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள சிறுமிகள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த இந்தச் சிறுமி நேற்று தான் பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு விடுதியை விட்டு சென்றவர் வேறொரு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சடலமாகவே மீட்கப்பட்டார் என குறித்த சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)
Open