செய்திகள் பிராந்தியசெய்திகள்

வவுனியாவில் விபத்து ஒன்பது மாணவர்கள் படுகாயம்! ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 8 வயது மாணவன் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது.

இன்று பிற்பகல் புளியங்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 10 பேர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த புளியங்குளம் பகுதியை சேர்ந்த அபிஷேக் 8 வயது மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இ.போ.ச பஸ் முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் குறித்த பஸ் சாரதியை கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 131 times, 1 visits today)
Open