செய்திகள் பிரதானசெய்திகள்

முஸ்லீம்களுக்கு தாரைவார்க்கப்படும் தமிழர்களின் 1500 ஏக்கர் நிலம்…??

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லீம் குடியேற்றத்திற்காக 1500 ஏக்கர் காணியை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஏறாவூர் பிரதேச செயலக கட்டிடத்தை திறந்துவைப்பதற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது. ரவூப் ஹக்கீம், ஹபீர் நஸீர் அஹமட் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் 50,000 மேற்பட்ட முஸ்லீம் மக்கள் வாழ்வதாகவும் அவர்களுக்கு காணிப் பற்றாக்குறையாக உள்ளதால் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உறுகாமம், கித்தூள், கிராமங்களை உள்ளடக்கிய முஸ்லீம் கிராமசேவையாளர் பிரிவு ஒன்றை உருவாக்கி தருமாறும் அதற்காக 1500 ஏக்கர் காணியை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அவர்களிடம் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை முன்வைத்தும் அவர் அதனை செய்யாது இழுத்தடித்து வருவதாக பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதே நேரம் கித்தூள், உறுகாமம் பகுதியில் தாங்கள் முன்னர் குடியிருந்ததாக கூறி காத்தான்குடி மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த 250 ற்கு மேற்பட்ட முஸ்லீம்கள் வீட்டுத் திட்டம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் 15 பேருக்கு மாத்திரமே அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டு திட்டம் வழங்குமாறு முஸ்லீம் அமைச்சர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளராக நியமிக்கப்பட்டவரை அந்த பதவியில் அமரவிடாமல், மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தங்கள் தொடர்பாக இரண்டு தினங்களின் முன்னர் தமிழ்பக்கம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில அதிர்ச்சி செய்திகளையும் தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

கடந்த 26ம் திகதி- வியாழக்கிழமை- மட்டக்களப்பிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டபோது, தமிழரசுக்கட்சியின் எம்.பி ஸ்ரீநேசன், மற்றும் அலிசாகிர் மௌலானா எம்.பி ஆகியோர் ஈஸ்ற் லகூன் விடுதியில் பிரதமரை சந்தித்து பேசினர்.

மாவட்ட செயலகத்தின் புதிய கணக்காளருக்கு அந்த நியமனம் வழங்கப்படக்கூடாது என்பதுதான் ஸ்ரீநேசனின் ஒரே கோரிக்கையாக இருந்தது.

அதேபோல, நேற்றும் பிரதமர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார். பிரதமருடன் விஜயம் செய்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரை ஸ்ரீநேசன், மௌலானா அணி மீண்டும் ஈஸ்ற் லகூன் விடுதியில் சந்தித்து, கணக்காளரின் நியமனத்தை இரத்து செய்யும்படி வலியுறுத்தியது.

19வது திருத்த சட்டத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம், பதவி உயர்வு விடயங்களை, முன்னைய மகிந்த ராஜபக்ச காலம் போல அரசியல் மயப்படுத்த ஸ்ரீநேசன் எதற்காக இத்தனை பிரயணத்தனப்படுகிறார் என நாம் பொறுப்புள்ள ஊடகமாக கேள்வியெழுப்புகிறோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்த அலிசாகிர் மௌலானாவுடன் ஸ்ரீநேசன் நெருக்கமாக செயற்படுவதன் பின்னணி என்ன? ஐ.தே.கவின் நலன்களை பாதுகாத்து, மாவட்டத்தை தாரைவார்த்து கொடுப்பதா?

 

நன்றி :- தமிழ்பக்கம் நிருபர்

(Visited 34 times, 1 visits today)

Close