செய்திகள் பிரதானசெய்திகள்

இலங்கையில் மூன்றாவது பிரமராக சயித்பிரேமதாச.. என்ன நடக்கும் தெரியுமா.??

தம்மை பிரதமராக நியமிப்பதனால் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஏற்கனவே இரண்டு பிரதமர்கள் இருக்கின்ற நிலையில் இன்னுமொருவராக என்னை நியமித்தால் பிரச்சினைகள் மேலும் பாரதூரமாக அமையக்கூடும்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மை என யாரும் நினைத்துவிடக்கூடாது. நாடாளுமன்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் தேர்தலிலும் இவ்வாறான குழப்பங்களை மேற்கொள்ள கூடியவர்கள்.

சபாநயாகரின் ஆசனத்தை அபகரித்துச் சென்றவர்கள், வாக்குப் பெட்டிகளை அபகரித்துச் செல்லக்கூடியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 177 times, 1 visits today)
Open