செய்திகள் பிரதானசெய்திகள்

புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உலக நாடுகளின் தலைவர்கள்! மீண்டும் கருணா

கடந்த காலத்தில் அமெரிக்க அரசியல்வாதி, பிரித்தானிய புலனாய்வுத்துறை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளிகளுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக முன்னாள் பிரதி அமைச்சா கருணா தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2000 – 2005 காலக் கட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அமெரிக்க அரசியல்வாதி றிச்சாட் ஆர்மிடேஜ், பிரித்தானிய புலனாய்வுத்துறை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். இது விசாரணை செய்யப்படவேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

“எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காது.

கிழக்கிற்கு அந்த பிரச்சினை இல்லை. கிழக்கிற்கு தலைமைத்துவம் உள்ளது. ஆனால் யாழ். மக்களை த.தே.கூட்டமைப்பு ஏமாற்றுகின்றது. எமத்து தேவை ராஜபக்ஸ மற்று கோத்தபாய ராஜபக்ஸ” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் ஹீரோவான ரணில் மற்றும் அவரது கட்சி போடும் திட்டங்களை நிறுத்துவதற்கு மஹிந்த அரசாங்கம் வேண்டும். எமக்கு பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்” என மற்றுமொரு பதிவையும் இட்டுள்ளார்.

இதேவேளை “2001 கட்டு நாயக்க மீதான புலிகளின் தாக்குதல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலயே நடத்தப்பட்டது. புலிகள் தலைமை, சில முக்கிய இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு துறைக்குமே தெரிந்த உண்மை இது. இப்படி இருக்க ரணில் விக்ரமசிங்க புலிகளுடன் ஒரு போதும் ஒப்பந்தம் செய்யவில்லை என கூறுகிறார்.” என அண்மையில் கருணா பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 35 times, 1 visits today)
Open