செய்திகள் பிரதானசெய்திகள்

நாடாளுமன்றத்தில் திடீரென ஹீரோவாக மாறிய சுமந்திரன்…!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணிக்கு பாரிய தோல்வியும், ரணில் தரப்புக்கு வெற்றியும் கிடைத்திருந்தது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாகவும், சபாநாயகர் மற்றும் அனுர ஆகியோரே இதற்கு முக்கிய காரணம் என்றும் பரவலாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றும் போது, சுமந்திரன் எழுந்து மிகவும் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார்.

இதில், உரையாற்றுவதற்கு தயாராக இருந்த லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கடும் கோபத்துடன் சுமந்திரன் எழுந்து வந்தார். ரணிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த லக்ஸ்மன் கிரியெல்லவிடம் சுமந்திரன் வந்து, வாக்கெடுப்பினை குரல் பதிவு மூலம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதற்கு அவசியமில்லை என சபாநாயகர் தெரிவித்த நிலையில், சுமந்திரனும் அதை ஏற்றுச்சென்றுள்ளார்.

(Visited 212 times, 1 visits today)
Open