செய்திகள் பிரதானசெய்திகள்

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் கைது..!!

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள பூர்வீக வீட்டில், பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகளை அனுட்டிக்க முயன்ற வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்கள், எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை உலகெங்குமுள்ள தமிழர்கள் பேரெழுச்சியுடன் அனுட்டித்து வருகிறார்கள். இலங்கையிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

வல்வெட்டித்துறையிலுள்ள வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டில் இன்று காலை பிறந்தநாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நிகழ்வு ஏற்பாடானது. பெருமளவான பத்திரிகையாளர்களும் குவிந்திருந்தனர்.

பிரபாகரனின் வீடு பற்றை மண்டியிருந்த நிலையில், இளைஞர்கள் அவற்றை துப்பரவு செய்தனர். அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிசார், துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் நால்வரிடம் அடையாள அட்டைகளை பறித்தனர்.

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரி- தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை அனுட்டிக்க முடியாதென குறிப்பிட்டதுடன், இனிமேல் இப்படி நடக்ககூடாதென எச்சரித்து அவர்களை விடுதலை செய்தார்.

அத்துடன் சிவாஜிலிங்கம் குழுவினர் பிறந்தநாள் நிகழ்விற்காக கொண்டு சென்ற கேக் உள்ளிட்டவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்

(Visited 152 times, 1 visits today)
Open