Published On:Sunday, April 7, 2019
மட்.போதனா வைத்தியசாலையில் நோயாளி உருவத்தில் இஸ்லாமிய மதமாற்றவாதி

#சுகாதார_அமைச்சு.
#தாதியர்சங்கத்_தலைவர்களே
#மதிப்பிற்குரியமட்டக்களப்பு_அம்பிட்டிய_தேரர்_அவர்களே!
#மேதகு_கண்டி #அம்பிட்டிய_தேரோ_அவர்களின்_கவனத்திற்கு
சிறுபிள்ளை வைத்திய விடுதியில் (விடுதி இல-33)இன்று கடமையிலிருந்த சிங்கள இன தாதிய உத்தியோகஸ்த்தர் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த வேளையில் காத்தான் குடியைச் சேர்ந்த இஸ்லாமியத்தாய் அவரை நோக்கி அழகானவர் நீங்கள் என்றும்,சிறுபிள்ளை என்றால் விருப்பமா எனக்கூறி கதை வளர்ந்துள்ளது!
இக்கதை இறுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாறுங்கள் அழகான முஸ்லிம் மாத்தையா இருக்கிறார்.அவரை திருமணம் முடித்தால் அழகான குழந்தை பிறக்கும்.பணம் வயல் காணி கடை பேசியல் எல்லாம் தருவோம் என அவ் இஸ்லாமியத் தாயார் சிங்கள தாதியரை நோக்கி ஆசையை ஊட்டியுள்ளார்.
கதை பொறுப்புத்தாதியின் காதை எட்டியது. பொறுப்புத்தாதி அவ் காத்தாங்குடி தாயை நோக்கி வந்த வேலையை மட்டும் பாருங்கோ அவளுக்கு மாப்பிள்ளை பேசி திருமணம் முடித்துக் கொடுக்க அவளின் பெற்றோருக்குத் தெரியும் என எச்சரித்தும் சென்றுள்ளார். அவர் சென்ற மறுகணமே காத்தாங்குடி யைச்சேர்ந்த இஸ்லாமியத்தாய் தனது கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி பொறுப்பு தாதி தன்னை கெட்ட வார்த்தையால் பேசியதாக முறையிட்டுள்ளாள்.
அங்கு வாந்த கணவர் தன் மனைவியின் கதையை நம்பி அங்கு கடமையிலிருந்த அனைத்து தாதியர்களையும் தனது கெட்டவார்த்தையால் திட்டியதுமில்லாமல் பணிப்பாளரிடமும் விடுதி பொறுப்பு வைத்தியர் Dr.அஞ்சலா அருளானந்தம் அவர்களிடமும் குறித்த தாதியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தனது வக்கிரப்புத்தியை கடமை நேரத்திலிருந்த அரச உத்தியோகத்தர்களிடம் காட்டியுள்ளார்.
பொறுப்பு_வைத்தியர்_அஞ்சலா_அருளானந்தம் அவர்களுக்கு கடமையிலிருந்த தாதியரை மதமாற்றத்திற்கு தூண்டியது சரி! ஆனால் அதைத் தடுத்தது பிழை!!!!! கைபேசி பாவனை தடை என பதாதை போட்டிருந்தும் விடுதியினுள் கைபேசி உபயோகித்தது மகா பிழை. கடமையிலிருந்த அரச உத்தியோகத்தரை மதமாற்றம் செய்யத்தூண்டியது மனித உரிமை மீறல்.
கடமை நேரத்தில் விடுதியில் இருந்த அரச ஊழியர்களுக்கு பங்கம் விளைவித்ததும் மகா குற்றம். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் இதற்கான நடவடிக்கைகளை அந்த குறித்த தாய்க்கும் அவளின் கணவருக்கும் எதிராக சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டும். இல்லை எனில் மேற்படி விடயத்தை சுகாதார அமைச்சு, வைத்திய தாதிய சங்கங்கள், மட்டக்களப்பு அம்பிட்டிய தேரர் மற்றும் மகாநாயக்க தேரர்களின் கவனத்திற்கு நாங்கள் நாளை எடுத்துச் செல்வோம் என்பதை வினயமாகக் கூறிக் கொள்கிறோம். இப்பதிவைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் பகிர்வைச் செய்வதன்மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நன்றி :- முகநூல்