எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, July 23, 2019

மட்டக்களப்பில் உயர் தர மாணவி தற்கொலை! வெளிவரும் பல காரணங்கள்!

செங்கலடி மத்திய கல்லூரி எட்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இம்மாணவி தாயும் தந்தையும் வெளிநாட்டில் உள்ள நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் செல்வராசா தரணியா -13 வயது , எட்டாம் ஆண்டில் கல்விகற்கிறார்.

செல்வராசா தனூஷியா -15 வயது, பத்தாம் ஆண்டில் கல்வி பயில்கிறார். செல்வராசா தனூஜன் - 17 வயது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் படிக்கிறார்.

இம் மூன்று மக்களையும் விட்டுவிட்டுத்தான் தந்தை பாக்கியராசா செல்வராசா கட்டாரிலும், தாய் யோகராசா சுதாஹினி துபாயிலும் தொழிலுக்கு சென்றிருக்கிறார்கள்.

தந்தை ஒன்பது வருடங்களாக வெளிநாடு சென்று வருகின்ற சூழ்நிலையில், தாய் வெளிநாடு சென்று பத்து மாதங்கள் தானாம். தந்தை வெளிநாட்டில் இருக்கும் போதே, தாய்க்கும் வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்த அதிகாரிகள் யாரோ??

இம் மூன்று மக்களினதும் நடவடிக்கைகளை கவனிக்க அம்மம்மாவான யோகராசா விஜயலச்சுமி (55) என்ற மற்றோரு குடும்ப தலைவிக்கு எப்படி முடியும்??

22/07/2019 திங்கள் காலை 07.15 மணிக்கெல்லாம் மாணவி தரணியா தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்று,

ஆங்கிலம், குடியியல் ஆகிய பாட பரீட்சைகளை எழுதிவிட்டு, மதியம் 12.30 மணிக்கு வீடு வந்து சேருகிறார். அவ் வேளை அம்மம்மா வீட்டிலிருக்கிறார்.

புத்தகப்பையினை படுக்கையறையில் வைத்துவிட்டு சீருடை களையாமலே, பகலுணவை உட்கொண்டிருக்கிறார்.

உணவு உட்கொண்டு முடிந்து, கை கழுவும் போது, பக்கத்து வீட்டு மாமி முறையான ஒருவர் தரணியாவை அழைத்து, கோடரியை எடுத்துவருமாறு கூற, அதனை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.

அதே நேரம் தரணியாவின் சித்தி முறையான ரஜனி என்பவர் ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலைக்கு செல்ல ஆயத்தமாகியிருந்ததால், அவரை பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக அம்மம்மாவும் வெளியேறி செல்கிறார்.

15 நிமிட இடைவெளியில் வீடு திரும்பிய அம்மம்மா, தரணியாவை அழைத்தபோது எதுவித சத்தமும் வரவில்லை.

வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்தாலும், படுக்கையறைக் கதவு உள் பக்கம் பூட்டியிருப்பதால், தரணியா சீருடையை மாற்றுகிறார் என அம்மம்மா எண்ணியிருந்த போதும்,

நேரம் செல்ல செல்ல தரணியாவை பல முறை அழைத்தும் பதில் கிடைக்காததால், படுக்கையறை யன்னல் (கம்பிகள் போடப்படவில்லை) திறந்திருந்ததால் அதனால் பார்வையிட்ட போதுதான்,

தரணியா வீட்டு வளையில் கறுப்புநிற ஷோலினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்திருப்பதை கண்டுள்ளார்.. ஏறாவூர் பொலிசாருக்கு விடயம் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு,

கௌரவ நீதிபதியின் அனுமதியுடன் பிரதேச மரண விசாரனை அதிகாரியை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரனைகளை தொடர்ந்தனர்.

விசாரனைகளின் போது ஏன்? தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

பிரேத பரிசோதனைக்காக மாணவியின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இன்று (23/07) பிரேத பரிசோதனை நடைபெறுவதற்கு முன் உடற்கூற்று தடயங்களை பார்வையிடச் சென்ற மரணவிசாரணை அதிகாரி,

மாணவியின் இடது கையில் I LOVE YOU என்ற வாசகம் சிவப்பு நிறத்தால் எழுதப்பட்டிருப்பதையும், மணிக்கட்டு பகுதியில் இதயத்தின் படம் வரையப்பட்டிருப்பதையும் அவதானித்தார்.

I LOVE. YOU என்ற வாசகத்துக்கு மேல் யாரோ ஒருவரின் பெயர் எழுதியிருக்கிறார், தெளிவின்றி காணப்படுகிறது.

பிரேத பரிசோதனையின்போது,

தூக்கிட்டதால் குரள் வளை இறுகி மூச்சுத்திணறி மரணித்திருப்பது கண்டறியப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கு காதல் காரணமா?? பெற்றோர் காரணமா?

மாணவியின் தந்தை சற்றுமுன் கட்டாரிலிருந்து வீடு வந்து சேர்ந்திருப்பதாக தகவல்.

அன்பின் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு. உங்கள் கண்காணிப்பிலிருந்து பிள்ளைகள் விடுபடுமானால், அவர்களது வாழ்க்கையும் தடம்மாறிப்போய்விடும்.

நம் மக்களை நாமே வாழ வைக்கவேண்டும். அவர்கள் தடுமாறாமல் பயணிக்க ஊன்று கோளாக நாமிருப்போம்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149