எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Monday, July 22, 2019

நண்பனின் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த துயரம்.!

நாம் வாழும் உலகில் பல விதமான துயரங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயரத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் நம்மை பெரும் துயருக்கு ஆழ்த்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் நடந்த கொடூரத்தின் தாக்கத்தில் இருந்தே மீண்டு வர இயலாமல்., மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டம் நெகமம் அருகேயுள்ள ஆவலம்பட்டியை சார்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இதே பகுதியில் வசித்து வரும் நபரின் பெயர் மணிகண்டன்.

இவன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இவனும் சுப்பிரமணியனும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். இந்த பழக்கத்தின் அடிப்படியில் அடிக்கடி சுப்பிரமணியனின் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளான்.

இந்த சமயத்தில்., ஒரு நாள் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு சென்ற சமயத்தில்., அவரது மனைவி குளிப்பதை கண்ட மணிகண்டன்., ஆள் இல்லாததை உபயோகம் செய்து மறைந்திருந்து பார்த்து., பின்னர் அடிக்கடி வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான்.

இவனது தொல்லை தாங்க இயலாத பெண் ஒரு சமயத்திற்கு மேல் கணவரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதன் காரணமாக நண்பர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., கடந்த 16 ஆம் தேதியன்று சுப்பிரமணியன் பணிக்கு சென்றவுடன் மணிகண்டன் வீட்டிற்கு சென்ற நிலையில்., நண்பனின் மனைவியிடம் வீட்டில் நடந்த செயல்களை ஆபாச காட்சிகளாக படம் பிடித்து வைத்துள்ளேன்.

எனது ஆசைக்கு நீ இயங்கவில்லை என்றால்., இந்த விடியோவை பிறரிடம் காண்பித்து உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதுமட்டுமல்லாது வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளேன்.

இதற்கு அஞ்சாமல் இருந்த ரஞ்சிதா காம கொடூரனை வெளியே அடித்து துரத்திவிட்டு., மணிகண்டனின் மனைவியான சந்தியாவிடமும் கூறியுள்ளார். இதனை மனைவி கண்டிக்காமல் இருந்த நிலையில்., இது குறித்து கணவரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.

இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து., சிறையில் அடைத்தனர். மேலும்., கணவனின் பாலியல் தொல்லைக்கு வக்காலத்து வாங்கிய சந்தியாவையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149