Published On:Saturday, August 10, 2019
துரோகி பட்டியலில் மனோ கணேசன் : ஆதரப்பார்களா கிழக்கு தமிழர்கள்.!

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் தமது அரசியல் பணிகளை மேற்கொண்டுள்ள மனோ கணேசன் மீது பெரும் சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகின்றது.
தமிழர் துரோகி பட்டியியலில் மனோ சேர்க்கப்பட்டு விட்டதாகவும் கிழக்கு தமிழர்களை சிங்களவர்களுக்கு விற்க மனோ களமிறங்கியுள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றது.
இந்நிலையில் மனோ கணேசன் ஒரு கருத்தை வெளியிட்டள்ளார். நான் ஒரு தமிழ் இலங்கையன். சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன்.
தன்னம்பிக்கைதான் என் முதல் பலம். சிறுபான்மை தமிழர்கள் (தமிழ் பேசும் முஸ்லிம்ளும்கூட…) என்னை இன்னமும்கூட முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
அத்தகைய புரிதல் வருவதற்குள் நான் பொதுவாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன் என்றும் நினைக்கிறேன்.