எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, August 6, 2019

ரணில் தரப்பின் கோமணம் காற்றில் பறக்கிறது.. மஹிந்த தரப்பு கிண்டல்.!!

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் மானம் காற்றில் பறக்கின்றது என எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. என்னதான் ஆட்டம் போட்டாலும் எமது அணியில் களமிறங்கும் வேட்பாளர்தான் வெற்றியடைவார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் மானம் காற்றில் பறக்கின்றது.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய என்று மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித் கரு என்று இருவருக்கிடையில் மூண்டுள்ளது. இதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என்று ஐ.தே.கவின் உயர்பீடம் திண்டாடுகின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடையப் போகின்ற ஐ.தே.க., வேட்பாளர் விடயத்தில் நடுவீதியில் வந்து மோதுவதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது என்றார்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149