எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Sunday, August 4, 2019

இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்குமா? எச்சரித்துள்ள அமெரிக்கா.!!

இலங்கையில் மீண்டும் சிறிய குழுவினரால் தற்கொலை தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், தமது நாட்டு பிரஜைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு இராண்டாவது பயண எச்சரிக்கையை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்காக அமெரிக்கா விடுத்துள்ள இரண்டாவது பயண எச்சரிக்கை இதுவாகும். இதேவேளை இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149