Monday, 13 January 2020

புதுப்பொலிவுடன் இயங்க ஆரம்பத்திருக்கும் பனங்காடு வைத்தியசாலை

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பெயர்ப்பலகை நேற்று (11.01.2020) திரைநீக்கம் செய்யப்பட்டது.

ஏற்கனவே பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டிருந்தாலும் உரிய வளங்கள் பகிரப்படாமலும் பெயர்ப்பலகை கூட ஆரம்பநிலை சுகாதார நிலையம் என இருந்து வந்துள்ளமை குறித்து இப்பிரதேச மக்களும் வைத்தியசாலை நலன்விரும்பிகளும் தங்கள் கவலைகளை தொடர்ந்து வெளியிட்டுவந்தனர்.


கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமையேற்றதன் பின்னர் இவ்வைத்தியசாலையின் நிலைமை மற்றும் அநீதிகள் தொடர்பாக கவனம் செலுத்தியதன் அடிப்டையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு உரிய நிதி ஓதுக்கீடுகள் வழங்கப்பட்டதுடன்

புதிய ஆண்டின் அபிவிருத்தி திட்டங்களுக்குள்ளும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் நேற்றையதினம் பெயர்ப்பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

பனங்காடு வைத்தியசாலை தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அதிக கவனம் செலுத்திப ல முறை நேரில் சென்று பார்வையிட்டிருந்ததுடன் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்க்கதாகும்.

Rea es:
SHARE THIS

Author:

Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News