Wednesday, 8 January 2020

கோலி கூறிய அந்த ‘ஆச்சரியப்படுத்தும் வீரர்’ யார்?

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தூரில் இடம்பெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘சகலதுறைகளிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டனர். கடந்த தொடரில் இருந்து பலத்துக்கு மேல் பலம் பெற்று திகழ்கிறது. ரோகித் சர்மா இல்லாமல் பெற்ற இந்த வெற்றி மகத்தானது.

இது அணிக்கு நல்ல அறிகுறியாகும். நவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. ரி-20 போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

ரி-20 உலகக்கிண்ணத் தொடர் நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன். 

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகவும் ‘பவுன்ஸ்’ ஆகும்.

உள்ளுர் போட்டியில் பிரதீஷ் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது மாதிரியான பந்து வீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிக்கும் ஏற்றவர்கள். உலகக்கிண்ண அணிக்கு அவரை எதிர்பார்க்கிறேன். அணிக்கு மீண்டும் திரும்பிய பும்ரா திறமையுடன் பந்து வீசுகிறார்’ என்றார்.

Rea es:
SHARE THIS

Author:

Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News