வெசாக் போயா தினமாகிய நேற்றைய தினம் சாராயம் விற்றவர் மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர் முற்றுகை நடவடிக்கையின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், வீட்டில் வைத்து 180மில்லி லீற்றர் போத்தலினை 1000 ரூபாய்க்கு சட்டவிரோதமான முறையில் மதுபான பொருட்களை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 85 மதுபான போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
#Jaffna #Manipay #Srilanka #arrest
Friday, 8 May 2020
Author: GK
Lankamurasu.Lk - Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments