Breaking News

அரசாங்கத்திற்குள் உக்கிரமடையும் மோதல் – களத்தில் இறங்கினார் மகிந்த

மகிந்த

அரசின் பங்காளி கட்சித் தலைவர்கள் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ(Mahinda Rajapaksa) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலின் பின்னரே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரகசிய கலந்துரையாடலில் அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) மற்றும் அமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோரும் இந்த வாரம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

னியும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதால் தான் இராஜினாமா செய்ய வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது ஒரு முட்டாள்தனமான அரசாங்கம் என டியூ குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அரசுத்தலைமை பங்காளி கட்சித் தலைவர்களை மதிப்பதில்லை எனவும் எனவே மாற்று முடிவை எடுக்க வேண்டிவவரும் என பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையினால் பிரதமர் ஏனைய பிரதான கட்சித் தலைவர்களுடன் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து நேரடி கலந்துரையாடல் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts