எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

மோடிக்கு இலங்கையில் இருந்து பறந்த வாழ்த்துக்கள்... ரணில், ராஜபக்சே ட்விட்

Posted by Yashika | Thursday, May 23, 2019 | Posted in ,

இந்திய லோக்சபா தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதா கட்சி பெருபான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஹிந்த ராஜபக்சே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக அரியணை ஏறும் மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் சிறந்த தலைமையின் கீழ் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.


உங்கள் தலைமையின்கீழ் பரஸ்பர நலனுக்காக அதை மேலும் பலப்படுத்துவதற்காக நாங்கள் பகிர்ந்துள்ள மற்றும் வேலை செய்யும் வலுவான இருதரப்பு உறவுகளில் தொடர்ந்து எங்கள் நாடுகள் இருக்குமென நம்புகிறோம் என வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மோடிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அற்புதமான வெற்றிப்பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள். நாம் உங்களுடன் நெருங்கிப் பணியாற்ற எதிர்நோக்கி இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்..!!

Posted by Yashika | | Posted in ,

நம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அவர்களது உடல் மட்டுமே நம்மை பிரிந்திருக்கிறதே தவிர அவர்களின் ஆன்மா அல்ல.

அவர்கள் திரும்பி வருவதற்கு எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் திரும்பி வருவதை நீங்கள் உணர கட்டாயம் முயற்சிக்க வேண்டும். ஆன்மாக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளது, ஆனால் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் சில அறிகுறிகளை உங்களுக்கு உணர்த்துவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் இறந்தவர்கள் உங்களுடன் தொடர்புகொள்ள செய்யும் செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


அவர்களின் வாசனை
ஆன்மாக்கள் தாங்கள் விரும்புவர்களுக்கு தங்களின் இருப்பை உணர்த்த பல வழிகளில் முயற்சி செய்வார்கள், அதில் ஒன்றுதான் அவர்களின் வாசனை. ஆன்மாக்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகம் வாசனை ஆகும். அது அவர்களின் உடல் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்களின் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களின் இருப்பை நீங்கள் எளிதில் உணர உதவும் வாசனையாக இருக்கலாம்.

கனவில் வருவது
இறந்தவர்களை பற்றி கனவு காண்பது சாதாரணமான ஒன்றுதான் ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களே கனவில் வந்தால் அவர்கள் உங்களுக்கு அருகில்தான் எங்கோ இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதுபோன்ற கனவுகள் உண்மை போலவே தோன்றும். அவர்கள் உங்கள் கனவில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள், ஏனெனில் அது அவர்கள் உங்களுக்கு கூறவரும் செய்தியாக இருக்கலாம்.

உங்கள் பொருட்கள் காணாமல் போவது
சிலசமயம் உங்களுக்கு பிடித்த சிறிய பொருட்கள் காணாமல் போகலாம், இதனை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்த ஆன்மாக்கள் உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சிப்பதன் அடையாளமாக கூட இது இருக்கலாம். இது மரண உலகில் இருந்து உங்களுக்கு அனுப்பும் செய்தியாக இருக்க வாய்ப்புள்ளது.

வித்தியாசமான எண்ணங்கள்
பிடித்தவர்களின் மரணத்தில் இருந்து வெளியே வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்களை பற்றியே சிந்தனையே உங்களுக்கு இருந்தால் யாருடனாவது இதைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள். அவர்களை பற்றிய வித்தியாசமான எண்ணங்கள் உங்களுக்கு வந்தால் அவர்கள் உங்களிடம் கூறவருவது என்னவென்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இசை
ஆன்மாக்கள் உணர்த்தும் முக்கியமான அறிகுறியாக இசை உள்ளது. நீங்கள் இருவரும் என்ன உறவை பகிர்ந்து கொண்டீர்களோ அதனை உணர்த்தும் பாடலை அடிக்கடி கேட்க நேர்ந்தால் அவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.

மின்சார செயல்பாடு
மின்சாரங்கள் மூலம் பேய்கள் தொடர்பு கொள்வது படங்களில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையில் நடக்கும். டிவி அல்லது லைட், மற்ற மின்சார பொருட்கள் திடீரென செய்லபட தொடங்குவது உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதற்கான அடையாளம் ஆகும். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் முடிந்தளவு அந்த வீட்டில் இருந்து விரைவில் வெளியேறி விடுங்கள்.

எண்கள்
ஆன்மாக்கள் பொதுவாக தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு ஊடகம் எண்கள் ஆகும். அது இறந்தவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்களுடன் தொடர்புடைய எந்த நாளாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

தொடுதல்
பக்கத்தில் யாரும் இல்லாத போது யாரோ தொடுவது போன்ற உணர்வு வருவது சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு வலிமையான அறிகுறி இதுவாகும். இது தொடுவது போலவோ அல்லது நெற்றியில் முத்தமிடுவது போன்ற உணர்வாகவோ இருக்கலாம்.

விலங்குகள்
நமது கண்களுக்கு தெரியாத பல விஷயங்கள் மிருகங்களின் கண்களுக்கு தெரியும். உங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அவைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களின் ஆன்மா உங்கள் வீட்டில் இருந்தால் அவை வித்தியாசமாக நடந்து கொள்ளும்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து

Posted by Yashika | | Posted in ,

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பா.ஜ.க 350 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் அந்த கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது நரேந்திர மோடி பிரதமராக தொடர்வது உறுதியாகியுள்ளது.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில், மரியாதைக்குரிய நரேந்திர மோடி ஜி, சாதித்து விட்டீர்கள், என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! சற்று முன்னர் சபாநாயகரின் அறிவிப்பு

Posted by Yashika | | Posted in ,

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.


இந்த நிலையில் மேற்படி பிரேரணை குறித்து விவாதம் செய்வதற்காக திகதியொன்றை நிர்ணயம் செய்வதற்காக இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மாட்டையும் விட்டு வைக்காத காமகன்.. காரணம் கேட்டால் கொந்தளிச்சிடுவீங்க..!

Posted by Yashika | | Posted in ,

உத்தர பிரதேசம், அயோத்தியாவில் போதை தலைக்கேறியதில் மாட்டை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம், அயோத்தியா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதே பகுதியில் கார்தியால்யா பாபா ஆஸ்ரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையத்தில்தான் இந்த கொடுமை தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது.

சில நாட்களாகவே மையத்தில் ஏதோ தவறுதலாக நடப்பதை உணர்ந்த பொறுப்பாளர்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் தொடர்ச்சியாக இந்த காமகொடூரன் இந்த வேலையை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த நாளும் அவன் இம்மாபாதக செயலை செய்யும்போது, கையும் கற்பழிப்புமாக பிடிபட்டான்.

பசிக்காக ஒருவேளை உணவு திருடியவனையே பரிதாபம் பார்க்காமல் போட்டுத்தள்ளும் தேசத்தில், மாட்டை கற்பழித்தவனை சும்மா விடுவார்கள். அலாரம் வச்சு அடிச்சு பழகியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் போதும் செத்துறப் போறான்னு போலீஸை வரச்சொல்ல, அவர்கள் அடுத்த ஷிஃப்டை ராஜ்குமாரிடம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்டா இப்புடி பண்ணினே என கேட்டதற்கு அவன் சொன்ன பதில், ஓவரா குடிச்சுட்டேன், என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல என்று கூறியிருக்கிறார் குறித்த நபர்.

அவுஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்

Posted by Yashika | Wednesday, May 22, 2019 | Posted in ,

சமீபத்தில் நடந்து முடிந்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றதால், தடுப்பு முகாம்களில் உள்ள பல அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும் லிபரல் தேசிய கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தங்களின் எதிர்காலம் மாறக்கூடும், தாங்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவோம் என நம்பிக்கைக் கொண்டிருந்த அகதிகள்/ புகலிடகோரிக்கையாளர்கள் இந்த வெற்றியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.


இதனால் சுமார் 10 அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகள்/புகலிடகோரிக்கையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய லிபரல் அரசாங்கம், படகு வழியாக வந்தவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த அனுமதிக்க மாட்டோம் என்கின்றது.

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களிடையே கடுமையான மன அழுத்தம், உடல் நிலை பிரச்னைகள் ஏற்பாடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது. இதில் பல அகதிகள் உயிரிழந்தும் இருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, அவுஸ்திரேலியாவின் தேர்தல் முடிவுகளை அகதிகள் பெரிதும் நம்பியிருந்ததாக சொல்லப்படுகின்றது.

தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பின், ஒன்பது அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியிருக்கிறார் குர்து எழுத்தாளரும் தஞ்சக்கோரிக்கையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. “தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை கடந்து இருக்கின்றது.

இது போன்று நான் மனுஸ் தீவை கண்டதே இல்லை,” என அவர் கூறியிருக்கிறார். சுமார் 10 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதை அறிந்திருப்பதாக கூறியிருக்கிறார் மனுஸ் மாகாண காவல் தளபதி டேவி யப்பூ.

போர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சூடான் அகதிகள் அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

கல்முனையில் ஒசாமா பின்லேடனின் புத்தகத்துடன் சந்தேகநபர் கைது

Posted by Yashika | | Posted in ,

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேரில் கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட அவரது விரிவுரைகள் அடங்கிய புத்தகமும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்முனை விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான இரு டீ.வீ.டீ. மற்றும் எம்.ஐ. வகை சிம்களை கொண்ட இரு கையடக்க தொலைப்பேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரபலமான செய்திகள்

சிறு விளம்பரங்கள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149